இந்திய ரயில்வே பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி, ஆன்லைனில் கசிந்தது உங்களின் தகவல்கள்
Indian Railway data leak: இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மோசமான செய்தி உள்ளது. அந்த வகையில் கோடிக்கணக்கான பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
இந்திய ரயில்வே தகவல் கசிவு: இந்திய ரயில்வேயின் 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஹேக்கர் ஒருவர் டேட்டாவை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளார் என்றும் கோடிக்கணக்கான பயனர்களின் மின்னஞ்சல், மொபைல் எண், முகவரி, வயது விவரங்களை ஹேக்கர்கள் பெற்றுள்ளதாக டைம்ஸ் நவ் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியான செய்திகளின்படி, இந்த டேட்டா லீக் குறித்து ரயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ரயில்வே வாரியம் CERT-In-க்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது. விசாரணைக்குப் பிறகு, டார்க் வெப்பில் கிடைக்கும் கசிந்த தரவுகளின் மாதிரி IRCTC இன் API வரலாற்றுடன் பொருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், இது IRCTC சர்வரில் இருந்து கசியவில்லை. இது தவிர, ஐஆர்சிடிசியின் வணிக கூட்டாளிகள் விசாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹேக்கரின் கூற்று என்ன
இந்திய ரயில்வே பயணிகளின் பயண வரலாறு மற்றும் இன்வாய்ஸ்களையும் கசியவிட்டதாக ஹேக்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பயனர்களின் இந்தத் தகவல்கள் தவிர, முன்பதிவு தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தரப்பிலோ அல்லது ரயில்வே தரப்பிலோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஹேக்கர் ஒருவர் பயணிகளின் தரவுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?
இதற்கிடையில் இந்த தரவு மீறல் டிசம்பர் 27 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. ஹேக்கர் மன்றத்தில் தரவு கசிவு பற்றி வெளியிடப்பட்டது. 'ஷேடோ ஹேக்கர்' என்ற பெயரில் இந்த தரவு கசிவு குறித்து பதிவு ஒன்று டார்க் வெப்பில் பகிரப்பட்டுள்ளது. மேலும் பல அரசுத் துறைகளைச் சேர்ந்த நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளையும் பெற்றுள்ளது. அத்துடன் ஐஆர்சிடிசி தரவை ஹேக்கர் குழு எவ்வாறு அணுகியது என்பது தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டி உள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு இதே போல் சுமார் 9 மில்லியன் மக்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்திருந்தன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவை அனைத்தும் தகர்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருத்தப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவின் கீழ் டேட்டா ப்ரீசுக்கு 500 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
மேலும் படிக்க | இனி டிரைவிங் லைசென்ஸ் பெறுவது கடினம்... ஜனவரி முதல் புதிய விதிகள் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ