ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விருப்பமா? இதோ ஒரு பொன்னான வாய்ப்பு...
ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பினை மக்களுக்கு மத்திய அரசின் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பினை மக்களுக்கு மத்திய அரசின் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, வேலை தேடுவதை தவிர்த்துவிட்டு, புதிய அல்லது சொந்த தொழில்களைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்திய இளைஞர்களிடையே காணமுடிகிறது.
சொந்தமாக தொழில் செய்வது என்பது எந்த காலத்திலும் மக்களின் விருப்பமான தெரிவாகவே இருந்துள்ளது. வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள்கூட, தங்கள் வேலைகளை விட்டு வெளியேறி, புதிய தொழில் தொடங்க முற்படுகின்றனர்.
முதலீடு மற்றும் லாபம் என்பது ஒரு தொழிலின் இரு கண்கள். ஒரு குறிப்பிட்ட வணிகத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறோம். இதில் முதலீடும் அதிகம், லாபமும் அதிகம். இது MSME திட்டத்துடன் தொடர்புடையத் தொழிலாகும். நீங்கள் இந்தத் தொழிலைத் தொடங்கினால், மத்திய அரசின் உதவியும் கிடைக்கும். அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள இந்த வணிக திட்டத்தின் படி, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
READ | MSME துறையின் சிக்கல்களுக்கு துரிதத் தீர்வு அளிக்கும் ‘Champions’...
அப்படி என்ன தொழில் அது?
நவநாகரீக மற்றும் புதுப் பாணியிலான காலணிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. காலணிகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த துறையில் தொழில் துவங்குவது உசிதமான யோசனையாகும். ஒரு காலணி உற்பத்தி பிரிவை தொடங்கி, கணிசமான தொகையை ஈட்டலாம். தேவையை தக்க வைத்திருப்பதன் மூலம் உங்கள் வணிகம் வெற்றிகரமாக இருக்கும் என்பதும் நிதர்சனமான உண்மையாகும். இந்த தொழிலுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி செய்கிறது.
திட்டத்திற்கான செலவு என்ன?
காலணி உற்பத்தித் தொழிலைத் தொடங்குவதற்கான மொத்த செலவு 41.32 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் பங்காக 16.32 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்தால் போதுமானது.
நிலம் - 4 லட்சம் ரூபாய்
கட்டிடம் - 8 லட்சம் ரூபாய்
ஆலை மற்றும் இயந்திரங்கள் - 19,85,990 ரூபாய்
மின்சார வசதிகள் - 96,610 ரூபாய்
செயல்பாட்டுக்கு முந்தைய செலவு - 35,000 ரூபாய்
பிற செலவுகள்- 33,000 ரூபாய்
பணி மூலதனம் - 7,81,450 ரூபாய்
மொத்தம்- 41,32,050 ரூபாய்
READ | MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!
இந்தத் தொழிலுக்கு அரசு கடன் கொடுத்து ஆதரவளிக்கிறது
பணி மூலதன கடன்: 3 லட்சம் ரூபாய்
காலக் கடன் (Term loan) : 22 லட்சம் ரூபாய்
முத்ரா திட்டத்தின் கீழ் எந்த வங்கியிலிருந்தும் எளிதாக கடன் பெறலாம்.
லாபகரமான தொழில் :16.32 லட்சம் ரூபாய் முதலீடு என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் மாத வருவாய் 9,07,050 ரூபாய் வரை இருக்கும்.
உற்பத்தி செலவு - மாதந்தோறும் 8,26,080 ரூபாய்
நிகர லாபம் - மாதந்தோறும் 80,970 ரூபாய்
ஆண்டு விற்பனை - 108.90 லட்சம் ரூபாய்
ஆண்டு லாபம் - 9.72 லட்சம் ரூபாய்
கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இதற்காக, பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ், எந்த வங்கியிலும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, பூர்த்தி செய்யும் படிவத்தில், பெயர், முகவரி, வணிகம் தொடங்கும் முகவரி, கல்வித் தகுதி, தற்போதைய வருமானம் மற்றும் எவ்வளவு கடன் தேவை போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும். எந்தவொரு செயலாக்கக் கட்டணமோ அல்லது உத்தரவாதக் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கடன் தொகையை 7 ஆண்டுகளில் திருப்பித் செலுத்தலாம்.
மொழியாக்கம் : மாலதி தமிழ்ச்செல்வன்