RBI Update: 2023 ஆம் ஆண்டு நிறைவுபெற இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த ஆண்டில் நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன் தாக்கம் சாமானியர்களின் மீதும் இருந்துள்ளது. மாறிவரும் உலக பொருளாதார சூழல், இந்திய பொருளாதாரம், பணவீக்கம், மக்களின் நிதி பாதுகாப்பு ஆகியவற்றக்க் கருத்தில்கொண்டு ஆர்பிஐ அவ்வப்போது புதிய விதிகளை உருவாக்குகிறது, திட்டங்களை தீட்டுகிறது. இய்து தவிர ஏற்கனவே உள்ள திட்டங்காளிலும் பல மாற்றங்களை செய்கிறது. புதிய ஆண்டை நாம் நெருங்கும் இந்த வேளையில் 2023 ஆம் ஆண்டு முழுவதும் வங்கித் துறையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செய்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2000 ரூபாய் நோட்டுகள்: பணமதிப்பிழப்பு (Demonetisation Of Rs 2000 Notes)


2023 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாக மே 19 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படவில்லை என்றாலும், தனிநபர்கள் தங்களின் ரூ.2000-ஐத் திருப்பித் தருவதற்கு நான்கு மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. 


பாதுகாப்பற்ற கடன்களில் அதிக ரிஸ்க் வெயிட் (Increased Risk Weight On Unsecured Loans)


பாதுகாப்பற்ற கடன்கள் தொடர்பான கவலைகளை உணர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) பாதுகாப்பற்ற நுகர்வோர் கடன்களின் ரிஸ்க் வெயிட் அதாவது அபாய அளவை உயர்த்தி, அதன் மூலம் கணிசமான மாற்றத்தை செயல்படுத்தியது.


வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFCs) இது 25 சதவீதம் அதிகரித்து, 100 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக மாறின. இந்த செயலூக்கமான நடவடிக்கை பாதுகாப்பற்ற கடன்களின் அதிகரிப்புடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


UPI இல் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டது (Increased Transaction Limit On UPI)


நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், RBI 2023 இல் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகத்தின் (UPI) பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியது. குறிப்பிடத்தக்க வகையில், கல்வி மற்றும் மருத்துவமனை கட்டணங்களுக்கான பரிவர்த்தனை வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்ந்தது.


மேலும் படிக்க | உச்சத்தைத் தொடும் இந்தியப் பொருளாதாரம்! அந்நிய செலாவணி கையிருப்பு உச்சத்தில்!


ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை (No Change In The Repo Rate)


மற்ற மாற்றங்களுக்கு மாறாக, ரிசர்வ் வங்கி 2023 முழுவதும் ரெப்போ விகிதத்தை (Repo Rate) 6.5 சதவீதமாகவே பராமரித்தது. ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கத் தீர்மானித்தது.


இதற்கு முன்னர் கடைசியாக பிப்ரவரி 2023 இல் ரெப்போ ரேட் உயர்வு அறிவிக்கப்பட்டது. பணவியல் கொள்கையில் ஒரு முக்கிய கருவியான ரெப்போ ரேட், கடன் வாங்கும் செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளை பாதிக்கிறது.


மாற்று முதலீட்டு நிதிகள் (Alternative Investment Funds)


மாற்று முதலீட்டு நிதியின் (AIF) எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதிலிருந்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (NBFCs) ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதில், வங்கிகள் அல்லது NBFCகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடன் வழங்கும் நிறுவனத்தில் முதலீடு செய்கின்றன. இந்த விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏஐஎஃப் மூலம் மோசமான கடன்கள் மறைக்கப்பட்டதால் இந்த விதிகள் வழங்கப்பட்டுள்ளன. AIF தொடர்பான வங்கிகள் மற்றும் NBFCகளின் சில பரிவர்த்தனைகள் ஒழுங்குமுறை கவலைகளை எழுப்புவதாக RBI கூறியது.  கடன் வழங்குபவர்கள் AIF இல் தங்கள் முதலீட்டை 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | வட்டிக்கு வட்டி கொடுக்கும் கூட்டு வட்டி! விரைவில் பணத்தை பல மடங்காக்கும் திட்டங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ