2012 ஆம் ஆண்டில், சுஹாசினி சம்பத் தனது சகோதரி அனிந்திதா சம்பத்துடன் நியூயார்க்கில் இருந்தார். இருவரும் யோகாசனத்தை முடித்துவிட்டு எனர்ஜி பார் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் எண்ணம் தோன்றியது. ஒரு எனர்ஜி பார் பொதுவாக அமெரிக்காவில் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் இல்லை. இது ஒரு வணிகமாக மாற முடியுமா? என்று யோசிக்க தொடங்கி "யோகா பார்" என்ற வர்த்தகத்தை தொடங்க முடிவு செய்தனர். 2014 ஆம் ஆண்டில், சுஹாசினி மெக்கின்சியில் நிர்வாக ஆலோசகராக பணிபுரிந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய தொடங்குகிறார். அதில், 40% இந்தியர்கள் காலை உணவைத் தவிர்க்கின்றனர் என்று அறிந்தார். உடனடியாக தன்னுடைய சொந்த வேலையை விட்டுவிட்டு தனது சகோதரிகளுடன் இணைந்து யோகா பார் யோசனையை செயல்படுத்தத் தொடங்கினார். அவர்களின் வர்த்த யோசனை என்பது மிகவும் எளிமையாக இருந்தது. 


அது என்னவென்றால், இந்தியாவில் இருப்பவர்களுக்கு 20 கிராம் மல்டிகிரைன் எனர்ஜி பார் ரூ.40-க்கு கிடைத்தால் சரியாக இருக்கும் என நினைத்தனர். அதுவும் ஓட்ஸ், பாதாம், பேரீச்சம்பழம் மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்களால் செய்யப்பட்டதாக இருந்தால் நிச்சயம் விரும்புவார்கள் என அவர்கள் எண்ணிணார்கள். இதனை பயணத்தின்போது கூட சாப்பிடலாம். காலை உணவையும் தவிர்க்க மாட்டார்கள், ஆரோக்கியமாக உணவாகவும் சாப்பிடுவார்கள் என எண்ணிணார்கள். இதனை தொடர்ந்து மூத்த சகோதரி ஆர்த்தி மற்றும் பிற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆரம்ப முதலீட்டுடன், யோகா பார் அதிகாரப்பூர்வமாக 2015-ல் தொடங்கியது.


மேலும் படிக்க | எம்பிஏ படித்தாலும் காய்கறி விற்பனை மூலம் ரூ. 50 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்


சுஹாசினி இந்த பார்களை தொழில்முறை பேக்கர்களைக் கொண்டு தயாரித்து பெங்களூரு முழுவதும் உள்ள கடைகள் மற்றும் யோகா ஸ்டுடியோக்களில் விற்பனை செய்யத் தொடங்கினார். அவர் தர உத்தரவாதம் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பை விரும்பினார். இதில் நேர்மறையான முடிவுகள் காட்டத் தொடங்கின. யோகா பார் இப்போது பெங்களூரு முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் யோகா ஸ்டுடியோக்களில் விற்கப்படுகிறது. சிறந்த அம்சம் என்னவென்றால், 75% வாடிக்கையாளர்கள் மீண்டும் பார்களை ஆர்டர் செய்தனர். மேலும் யோகா பார் காலை உணவு மற்றும் ஜிம் பிரியர்களுக்கான டையட்டாகவும் மாறியது.


வென்சர் கேப்ட்டலிஸ்டுகள் இந்த பிஸ்னஸின் வளர்ச்சியைக் கவனிக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் யோகா பார் நிறுவனம் பல்வேறு வழிகளில் 70 கோடி ரூபாய் திரட்டியது. இந்த பணத்தைக் கொண்டு உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. 2019-20 -ல் யோகா பார் நிறுவனம் 32 கோடி வருவாயை ஈட்டியது. அப்போது முதல் இந்த நிறுவனத்தின் வணிகம் ஆண்டுதோறும் 100% வளர்ச்சியடைந்தது.


எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது கோவிட் வந்தது. சுஹாசினிக்கு பெரிய கவலை ஏற்பட்டது. ஏனென்றால், அவர்களின் வணிகத்தில் 10% மட்டுமே ஆன்லைனில் அப்போது இருந்தது, 90% ஆஃப்லைனையே நம்பியிருந்தது. இதனை சமாளிக்க யோகாபார் அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஆன்லைன் பிராண்டாக புதுப்பிக்கப்பட்டது. அதன் வலைத்தளங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் அதிக தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கியது. இதில் மிகப்பெரிய வளர்ச்சியை யோகா பார் நிறுவனம் கண்டது.


கோவிட் வைரஸூக்குப் பிறகு யோகா பார் நிறுவனத்தின் வருவாயில் 68 கோடியாக வளர்ந்து நின்றது. மியூஸ்லி, தானியங்கள், ஓட்ஸ் போன்ற பல தயாரிப்புகளுடன் வளர்ந்தது. யோகா பார் இப்போது 100-CR+ வருவாய் நிறுவனமாக உள்ளது. நெஸ்லே, ஐடிசி, டாபர்-எல்லோரும் யோகா பார் வாங்க விரும்பினர். இந்நிலையில், ITC நிறுவனம் 175 கோடிக்கு 39% பங்குகளை வாங்கியது. முழு சந்தை மதிப்பு என்பது இப்போது 500 கோடியை கடந்திருக்கிறது. மார்க்கெட்டிங் குழு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட யோகா பார் சுஹாசினியின் அயராத உழைப்பால் மிகப்பெரிய நிறுவனமாக இப்போது உயரந்திருக்கிறது.


மேலும் படிக்க | அமேசான் வேலையை விட்டுவிட்டு 4 கோடி ரூபாய் தொழிலை உருவாக்கிய தமிழக இளைஞர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ