உத்திரபிரதேசத்தை (Uttar pradesh) பாலிவுட்டின் தலைநகராக மாற்றும் முயற்சியாக, பிரமாண்டமான பிலிம் சிட்டியை (Film City) உருவாக்கும் மிகபெரிய திட்டம் தொடர்பாக, பாலிவுட்டை சேர்ந்த முக்கியமான சில நபர்களுடன் இன்று (செப்.22) ஆலோசனை செய்ய உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிலிம் சிட்டி தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள பல முக்கிய நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் (Chief Minister Yogi Adityanath) இல்லத்திற்கு செல்கிறார்கள். 


உத்திரபிரதேசத்தில் நாய்டாவிற்கு அருகில் உள்ள கிரேட்டர் நாய்டாவில், இந்த பிரம்மாண்டமான பிலிம் சிட்டி அமைய உள்ளது.


முன்னதாக திங்களன்று, மீரட் பிரிவின் மேம்பாட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தின் போது முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா அல்லது யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் (Yamuna Expressway) அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களில் இதற்கான பொருத்தமான இடத்தை  பரிந்துரை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதோடு, ஒரு செயல் திட்டத்தையும் தயாரித்தார். 


மேலும் படிக்க | மும்பை திரைப்படத்துறைக்கு போட்டியாக உருவாகிறது புதிய Film City..!!!!


பிலிம் சிட்டியை  நிறுவுவதற்கான திட்டத்தை யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.


யமுனா அதிவேக நெடுஞ்சாலையில், ஜேவரில் அமைந்துள்ள  நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு  6 கி.மீ தூரத்தில் உள்ள் இடம் பிலிம் சிட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அருகில் இருப்பதாலும், தேர்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகில், கவுதம் புத்தா இண்டர்நேஷன்ல் சர்க்யூட் எனப்படும் கார் பந்தயத்திற்கான இந்தியாவின் ஃபார்முலா ஒன் ரேஸ் ட்ராக் Formula One track அமைந்துள்ளாதாலும் , இந்த குறிப்பிட்ட இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | சீர்திருத்தம் இல்லாமல் ஐநாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.. பிரதமர் மோடி..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR