Revolt RV 400: ரூ. 35 ஆயிரம் வரை மானியம் - வெறும் 9 ரூபாயில் 100 கி.மீ பயணிக்கலாம்
நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க நினைத்தால், இந்த மலிவு விலை மின்சார பைக்கை வாங்க பரிசீலிக்கலாம். பலரின் மனதில் எழும் கேள்வி என்னவென்றால், மின்சார பைக்குகளின் விலை மிக அதிகம் என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 (Revolt RV 400) பைக்கை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, மாற்று வாகனத்தை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பலர் தற்போது மின்சார வாகனங்கள் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்கள் மிகவும் சிக்கனமானவை.
நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க நினைத்தால், இந்த மலிவு விலை மின்சார பைக்கை வாங்க பரிசீலிக்கலாம். பலரின் மனதில் எழும் கேள்வி என்னவென்றால், மின்சார பைக்குகளின் விலை மிக அதிகம் என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 (Revolt RV 400) பைக்கை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
ரெவோல்ட் ஆர்.வி 400 மோட்டார் சைக்கிளின் சிறப்பு அம்சங்கள் என்ன:
எலக்ட்ரிக் பைக்குகளின் (Electric Bike List) சந்தையில் ரெவோல்ட் ஆர்.வி 400 மிகவும் பிரபலமான பைக் ஆகும். செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடன் இயங்கும் கண்கவர் தோற்றத்தில் அறிமுக ஆகி உள்ள இந்த பைக்கில் பல தனித்துவமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பேஸ் மற்றும் ப்ரீமியம் என இரண்டு வேரியன்டுகளில் ரெவோல்ட் ஆர்.வி 400 பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
ALSO READ | குறைந்த விலையில் 3 சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்கள், முழு விவரம் இங்கே
சில நாட்களுக்கு முன்பு டெல்லி மற்றும் குஜராத்தில் மின்சார வாகனங்களுக்கு மானியம் (Electric vehicles Subsidy) அறிவிக்கப்பட்டது. குஜராத்தில் ரெவோல்ட் ஆர்.வி 400 பைக்கை வாங்கினால், உங்களுக்கு மானியத்திற்கு பிறகு வெறும் 68,000 ரூபாய்க்கு கிடைக்கும்.
குஜராத் அரசு சமீபத்தில் மின்சார வாகன கொள்கை 2021 ஐ அறிவித்தது. இதன் கீழ் நீங்கள் வாங்கும் மின்சார வாகனங்களுக்கு பெரும் மானியத்தைப் பெறலாம்.
குஜராத்தில் மிகக் குறைந்த விலையில் ஆர்.வி 400 பைக் வாங்கலாம்:
குஜராத் அரசு மின்சார வாகனங்களுக்கு ஒரு KWh-க்கு ரூ .10,000 என்ற விகிதத்தில் மானியம் வழங்குகிறது. 3.2 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி ரெவோல்ட் ஆர்.வி 400 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த பைக்கிற்கு குறைந்தபட்சம் ரூ .20,000 வரை மானியம் கிடைக்கும்.
இது தவிர, மத்திய அரசு FAME II கொள்கையின் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன் கீழ், நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 மோட்டார் சைக்கிளுக்கு கூடுதலாக 15 ஆயிரம் ரூபாய் மானியத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாக, நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 பைக் வாங்கினால் சுமார் 48,000 ரூபாய் வரை மானியத்தைப் பெறலாம்.
ALSO READ | Earth Energy-யின் அட்டகாசமான எலக்ட்ரிக் பைக்குகள்.. செலவு 30 சதவீதம் மிச்சமாகும்.
எங்கு ரெவோல்ட் ஆர்.வி 400 கிடைக்கும்:
தற்போது, ரெவோல்ட் நிறுவனம் டெல்லி, மும்பை, புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டுமே ரெவால்ட் ஆர்.வி 400 மின்சார பைக்கை விற்பனை செய்கிறது.
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் விரைவில் இந்த பைக்கை மேலும் 35 நகரங்களில் விற்பனை செய்யவுள்ளது. சுமார் 4 மணிநேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகம்பட்சம் 156 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.
ALSO READ | இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா; விற்பனை தகவல் வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR