புதுடில்லி: சந்தையில் பல கவர்ச்சிகரமான நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் உள்ளன, அவற்றில் ஓய்வூதிய திட்டங்களும் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இதுபோன்ற திட்டங்கள் மூலம்  உங்களது எதிர்காலத்தையும் உங்கள் மனைவியின் எதிர்காலத்தையும் சிறப்பக அமைத்து கொள்ள, சிறந்த ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன.


உங்கள் அன்பான மனைவியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அற்புத திட்டம் ஒன்று உள்ளது. NPS, அதாவது தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் ₹.44,793 ஓய்வூதியம் பெறலாம்.


மேலும் படிக்க | நீங்கள் பழைய நாணயம் சேமிப்பவரா.. அப்படியானால், லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது..!!!


NPS என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதிய மற்றும் முதலீட்டு திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அடிப்படையிலான வருவாய் மூலம் மக்களுக்கு முதுமை காலத்தில், பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 


இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ((PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது. PFRDA நிறுவிய தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST), NPS அதாவது தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து முதலீடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.


உங்கள் மனைவி, ஒரு ஹோம் மேக்கர் என்றால்,  அவர், தனது வயதான காலத்தில் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், நீங்கள் இன்றே திட்டமிடலாம். 


நீங்கள் குறைந்த வயதில் முதலீட்டை தொடங்கினால், அதிகபட்ச பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் மனைவியின் வயது 30 ஆண்டுகள் என்றால், கீழ்கண்ட வகையில், இந்த திட்டம் இருக்கும்.


மேலும் படிக்க | DigiLocker: PAN, ஆதார், பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசன்ஸ் தொலையும் என்ற கவலையே இல்லை..!!!


மொத்த முதலீட்டு காலம்: 30 ஆண்டுகள்


மாத பங்களிப்பு: ரூ .5,000


எதிர்பார்க்கப்படும் வருமானம்: 10 சதவீதம்


முதிர்வு காலத்தில் கிடைக்கும் மொத்த ஓய்வூதிய நிதி: ரூ .1,11,98,471


வருடாந்திர திட்டத்தை பெற ரூ .44,79,388


8 சதவீத வருடாந்திர வட்டியில் ரூ .67,19,083


மாத ஓய்வூதியம்: ரூ .44,793


18-65 வயதுக்குட்பட்ட இந்தியாவின் எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் (குடியுரிமை மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள்) கணக்கை தொடக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்டகணக்குகளைத் திறக்க அனுமதி இல்லை என்றாலும்,  ஒரு தனிநபர் என்.பி.எஸ்ஸில் ஒரு கணக்கையும், அடல் பென்ஷன் யோஜனாவில் மற்றொரு கணக்கையும் வைத்திருக்க முடியும்.


18-65 வயதுக்குட்பட்ட இந்தியாவின் எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் (குடியுரிமை மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள்)  கணக்கை தொடங்கலாம். NPS கணக்கை தனிப்பட்ட வகையில் மட்டுமே தொடங்க முடியும். அதாவது இருவர் பெயரிலும் கூட்டாக தொடங்க இயலாது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe