CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என CBSE நிர்வாகம் அறிவித்து இருந்தது அதன்படி CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இத்தேர்வில் சுமார் 16.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர்.


இந்நிலையில் தற்போது CBSE பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று  இணையத்தில் வெளியானது.


இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in மற்றும் results.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?


cbse.nic.in , cbseresults.nic.in மற்றும் results.gov.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் CBSE Class 10 Result 2018 கிளிக் செய்யவும்.
கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.