CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என CBSE நிர்வாகம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE ) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. 


முன்னாதக கடந்த மே 26-ஆம் நாள் CBSE 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட CBSE 12-ம் வகுப்பு Economics தேர்வு ஏப்ரல் 25-ம் நாள் மீண்டும் நடைபெற்றது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதே வேலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் மீண்டும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறுத்தேர்வு நடத்தப்படவில்லை. 



இந்நிலையில் தற்போது CBSE பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்று இருப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன.


இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?


  • cbse.nic.in , cbseresults.nic.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.

  • இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் CBSE Class 10 Result 2018 கிளிக் செய்யவும்.

  • கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.

  • பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.

  • பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.