கடந்த மாதம் 26, 28 தேதிகளில் நடைப்பெற்ற CBSE 12ம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10ம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என CBSE அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் வரும் ஏப்ரல் 25ம் நாள் ரத்து செய்யப்பட்ட CBSE, 12ம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. 


வாட்ஸ்ஆப் மூலம் CBSE 10ம் வகுப்பு கணிதம், மற்றும் 12ம் வகுப்பு வணிக பொதுத்தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததது. அதனால், அந்த இரண்டு தேர்வுகளையும் மறுபடியும் நடத்த CBSE  முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.  


இந்நிலையில், CBSE  10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டு மறுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில் மறுத்தேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.