CBSE 10ம் வகுப்புக்கு மறுத்தேர்வு கிடையாது?
கடந்த மாதம் 26, 28 தேதிகளில் நடைப்பெற்ற CBSE 12ம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10ம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என CBSE அறிவித்தது.

அந்த வகையில் வரும் ஏப்ரல் 25ம் நாள் ரத்து செய்யப்பட்ட CBSE, 12ம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது.
வாட்ஸ்ஆப் மூலம் CBSE 10ம் வகுப்பு கணிதம், மற்றும் 12ம் வகுப்பு வணிக பொதுத்தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததது. அதனால், அந்த இரண்டு தேர்வுகளையும் மறுபடியும் நடத்த CBSE முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளியல் தேர்வை வரும் 25ம் தேதி மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல் 10ம் வகுப்பு கணித தேர்வை ஹரியானா மற்றும் டெல்லியில் மட்டும் நடத்த CBSE முடிவு செய்திருந்த நிலையில் 10ம் வகுப்பு கணித தேர்விற்கு மறுதேர்வு நடத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.