#CauveryIssue: மேலும் 2 வாரம் அவகாசம் கோரும் மத்திய அரசு!
காவிரி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது!
காவிரி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது!
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் வரும் மே 3-ஆம் நாள் இந்த மனு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 4 நான்கு மாநிலங்களுக்கு, காவிரி நதி நீரினை பங்கீட்டு வழங்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட கெடு வரையிலும் மத்திய அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்பினை அவமதித்ததாக தமிழக அரசின் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ’ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு விளக்கமளித்த உச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ என்றால் காவிரி பிர ச்சனையை தீர்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் வரும் மே 3-ஆம் தேதிக்குள் காவிரி விவகாரம் தொடர்பாக, வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது காவிரி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் வரும் மே 3-ஆம் நாள் இந்த மனு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.