தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்கவேண்டும் மத்திய அரசை வலியுறுத்தியதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று 15-வது நிதி ஆணையத் தலைவர் கே.என்.சிங் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்... "இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டதாக" தெரிவித்தார்.


இச்சந்திப்பிற்கு பின்னர் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களையும் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.



இச்சந்திப்பு குறித்த செய்தியாளர்களிடம் கூறிய அவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் தமிழ்நாட்டிற்கு கூடுமானவரை அதிகளவு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.