சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் அன்னதான திட்டம்' என்ற பெயரில் 5 ரூபாய் உணவு திட்டம் அமலுக்கு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் கடந்த ஆண்டு ஆகஸ்டில், ராய்ப்பூர், துர்க், பிலாஸ்பூர், ஜாஞ்ச்கிர் - சம்பா, கோர்பா, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் அன்னதான திட்டம்' என்ற திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக தெரிவித்திருந்தார். 


இது தொடர்பாக நேற்று, ஜாஞ்ச்கிர் - சம்பா மற்றும் கோர்பா மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடிய சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் ஜாஞ்ச்கிர் - சம்பா மற்றும் கோர்பா இந்த இரண்டு மாநிலங்களிலும் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார். 


 இதையடுத்து, தொழிலாளர்களின் நலனுக்காக இவர் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் அன்னதான திட்டம்' என்ற 5 ரூபாய் உணவுத்திட்டத்தை அமல்படுத்துவதாக அவர் கூறினார். 


தொழிலாளர்க பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உணவுத்திட்டமானது வெறும் 5 ரூபாய் வழங்குவதாகவும். மேலும் இத்திட்டம் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் தெரிவித்தார். 


இத்திட்டத்தினால் பயனடைய விரும்பும் தொழிலாளர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 


இந்த 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் அன்னதான திட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் பாத்திரத்திலும் உணவை வாங்கிச் செல்லலாம் எனவும் அவர் தெரிவித்தார்.  


இந்த திட்டத்தின் கீழ் இந்த இரு மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தி அதிகளவில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும்' என சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் நேற்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணி ஆய்வுக் கூட்டத்தில் கூறினார்.