நாகர்கோவிலுக்கு கோடை கால சிறப்பு ரயில்கள் - இன்று 8 மணிக்கு முன்பதிவு
சென்னை சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் இடையே கோடை கால சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தென் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயில் வாட்டி வருகிறது. மேலும் மாணவ - மாணவிகளுக்கு பள்ளி கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றைடையும்.
சிறப்பு கட்டண ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:-
ஜூன் மாதம் ஐந்து நாட்களுக்கு இந்த சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகிறது.
இயக்கப்படும் நாள் : ஜூன் 2, 9, 16, 23, 30
புறப்படும் இடம் : சென்னை சென்ட்ரல்
புறப்படும் நேரம் : இரவு 8 மணி
சேரும் இடம் : நாகர்கோவில்
சென்றடையும் நேரம் : மறுநாள் காலை 11:05 மணி
அதேபோல, ஜூன் மாதம் 29-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
தேதி : ஜூன் 29
புறப்படும் இடம் : நாகர்கோவில்
புறப்படும் நேரம் : மாலை 4 மணி
சேரும் இடம் : சென்னை சென்ட்ரல்
சென்றடையும் நேரம் : மறுநாள் காலை 8.30 மணி
இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது.