விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்தது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


திரைத்துறையினரின் வேலைநிறுத்தமதிற்கு பிறகு இந்த படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் அதில், இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது. 
அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.


அந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்!