தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஜூலை 17 அன்றுதான் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பெருநகரங்களில் ஒன்றாக திகழும் இன்றைய சென்னை 382 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது.   இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய கிழக்கிந்திய கம்பெனியினராகிய ஆங்கிலேயர்கள் வந்தவாசியை ஆண்டு வந்த தாமல் வெங்கடப்ப நாயக்கரிடம் இன்றைய சென்னையில் ஒரு சிறு நிலப்பகுதியை, இன்றைய தலைமை செயலகம் உள்ள கோட்டை பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் பெற்றனர். அந்த சிறுநிலப்பகுதிக்கு தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக சென்னை பட்டினம் என பெயரிடப்பட்டது. அதேகால கட்டத்தில் சாந்தோம் துறைமுகத்தை உருவாக்கி மெட்ராஸ் எனவும் அழைத்தனர்.


பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது இந்த மதராஸ் மாகாணம் பெரும்நிலப்பரப்பு கொண்டதாக இருந்தது. இன்றைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிஷாவின் பகுதிகளை உள்ளடக்கியதாகவே விரிந்து கிடந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போதும் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. 1969-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17-ல் மெட்ராஸ் என்ற பெயர் நீக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை - Chennai என்று அழைக்கப்பட்டு வருகிறது.


கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை தினம் அதாவது மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது.


சென்னை சிறப்புகள்


இந்தியாவிலேயே வைபை வசதி அதிகமாக கொண்ட இடம் சென்னை தான்.  கேபிள் டிவி நெட்வொர்க் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் சென்னை.  இந்தியாவிலேயே அதிகமாக மக்கள் தொகை கொண்ட நான்காவது நகரமும் சென்னைதான்.  தி நியூயார்க் டைம்ஸின் சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே தெற்காசிய நகரம் சென்னை.   வெளிநாட்டில் அவர் அதிகமாக வசிக்கும் நகரங்களில் சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது.   மேலும் எலெக்ட்ரிக் ட்ரெயின், மெட்ரோ என தமிழ்நாட்டிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரே நகரம் சென்னைதான்.  எந்த ஒரு புதிய திட்டம் என்றாலும் முதலில் அமல்படுத்தப்படுவதும் சென்னையில் தான்.



மெட்ராஸ் டே-வை கொண்டாடும் வகையில் சென்னை மாநகராட்சி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.  சென்னை மாநகராட்சி நிர்வாக கட்டிடமான ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 



"சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்! " என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   இந்த வருடம் தமிழக பட்ஜெட்டில் சென்னை 2.0 திட்டத்தின் மூலம் நிறைய புதிய அம்சங்களை கொண்டு வர உள்ளனர். 


ALSO READ கோடம்பாக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும்  - PTR


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR