சென்னை மெட்ரோ நிலையங்களில் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி விரைவிலை ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதியினை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான மையங்கள் சென்னையில் உள்ள நான்கு மெட்ரோ நிலையங்களில் ஏற்படுத்தப்படவுள்ளன.


அதன்படி திருமங்கலம், பரங்கிமலை, ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் பேட்டரி சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த பேட்டரி சார்ஜர் மூலம் ஒரே நேரத்தில் 10 மின்சார பைக் மற்றும் 5 மின்சார கார்கள் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பவர் கிரிட் கார்ப்பரேஷனுடன் இணைந்து செயல்படுவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.


மேலும் பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தின் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இ-பைக் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.


மேலும் சென்னை ரயில் நிலையங்களில் கார்களை நிறுத்துவதற்கு தொரந்து பிரச்சணைகள் எழுந்து வரும் நிலையில் எழும்பூர் மெட்ரோ நிலையத்தில் கார்களை நிறத்துவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் 100 கார்களை நிறுத்துவதற்கான நிலை தளத்தினை கட்டிமுடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.