புதுடெல்லி: புதிதாக அமைக்கப்பட்ட கரும் பச்சை சேப்பாக்கம் மைதானம், கொரோனா தாக்கத்திற்கு பிறகு சென்னை ரசிகர்கள் எழுப்பும் உற்சாகக் குரலை இன்று காலை முதல் கேட்கும். இது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றுப் போனது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற வேண்டுமானால் இந்தியாவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்பதால் இந்திய அணி முனைப்புடன் விளையாடுவதற்கு ரசிகர்களின் ஊக்கமும் காரணமாக அமையும்.


 Also Read | India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
அதுமட்டுமல்ல, முதல் டெஸ்ட்டைப் போல இல்லாமல், இரண்டாவது போட்டியின் ஆடுகளம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.


டபிள்யூ.டி.சி (World Test Championship (WTC)) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்தியா இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும், எந்த ஆட்டத்திலும் தோல்வியடையக் கூடாது என்பது இந்திய அணியினரின் முன் உள்ள சவால் ஆகும். 


அதேபோல், முதல் போட்டியில் வெற்றி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவிலும் டெஸ்ட் போட்டித் தொடரை கைப்பற்ற வேண்டுமானால், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும்.


இங்கிலாந்து அணி தனது கள வீரர்களை அறிவித்துவிட்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) மற்றும் ஜோஸ் பட்லர் (Jos Buttler) ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே இரண்டாவது டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.பென் ஃபோக்ஸ் (Ben Foakes) விக்கெட் கீப்பராக செயல்படுவார். ஆண்டர்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் (Stuart Broad) களம் இறங்குகிறார்.


Also Read | இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஃபேஸ்புக் BLOCK செய்த காரணம் என்ன?


இந்திய அணியை பொறுத்தவரை, அக்ஷர் படேல் அணிக்கு திரும்பியுள்ளார். இன்றைய போட்டியில் நதீமிற்கு பதிலாக அக்ஷர் படேல் களமிறங்குகிறார். பும்ரா, இஷாந்த், அஸ்வின், வாஷிங்டன், அக்ஷர் படேல் கூட்டணி பந்துவீச்சை கவனித்துக் கொள்ளும்.  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR