ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்
கோ, அயன், மாற்றான், காப்பன் போன்ற ஹிட் படங்களை வழங்கிய பிரபலமான இயக்குனர் கே.வி.ஆனந்த், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார்.
சென்னை: கோ, அயன், மாற்றான், காப்பன் போன்ற ஹிட் படங்களை வழங்கிய பிரபலமான இயக்குனர் கே.வி.ஆனந்த், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார்.
54 வயதான திரைப்பட இயக்குக்நர் கே.வி ஆனந்தின் விளம்பரதாரர் ரியாஸ் அகமது ஒரு ட்விட்டர் பதிவு மூலம் இதை உறுதிப்படுத்தினார்.
ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக சில காலம் பணியாற்றிய ஆனந்த் 1990 களில் ஒளிப்பதிவுக்கு மாறினார். கேமராவின் பின்னால் அவர் அறிமுகமான மலையாள திரைப்படமான Thenmavin Kombath திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
Also Read | எனது பெற்றோருக்கு கொரோனா, உதவி கேட்கும் பிரபல நடிகை!
தமிழ், மலையாளம், இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி. ஆனந்த் கனா கண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். சூர்யாவை வைத்து அயன், மாற்றான், காப்பான் என முத்தான மூன்று படங்களை இயக்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 14 திரைப்படங்களுக்கு கே.வி. ஆனந்த் கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். ஒளிப்பதிவாளராக 2007ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் பணிபுரிந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் படமாக உருவானது சிவாஜி த பாஸ்.
பிரபல இயக்குநர் கே. வி. ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காப்பான் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் கே.வி. ஆனந்த், தனுஷை வைத்து அனேகன், விஜய் சேதுபதியை வைத்து கவண் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கே.வி. ஆனந்தின் இழப்பு, தமிழ் திரையுலகிற்குக் பேரிழப்பு.
Also Read | தோனிக்கு பதிலாக வரப்போகும் CSK கேப்டன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR