சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் புதிய உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ள முடியும். இதற்கு குறைந்த பட்ச கட்டணமாக 65 விதமான பரிசோதனைகளுக்கும் சேர்த்து அம்மா டைமண்ட் திட்டத்தில் கீழ் 
ரூ.2,000 நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று, 60 விதமான பரிசோதனைகளுக்கு ஆயிரம் ரூபாயும், 70 பரிசோதனைகளுக்கான பிளாட்டினம் திட்டத்திற்கு 3 ஆயிரம் ரூபாயும் குறைந்த பட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையத்தில் ரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எலும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், முழு உடல் பரிசோதனைகளுக்காக பதிவு செய்ய 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.