சென்னை வந்த பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை மனு!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு..!
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இதை கண்டித்து தமிழகம் முழுதும் போரட்டம் துவங்கினர்.
இதற்கிடையில், பிரதமர் மோடி சென்னையில் உள்ள இராணுவ கண்காட்சியை துவங்கி வைக்க மாமல்லபுரம் வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வந்தது.
இந்நிலையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி-க்கு அனைவரும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மோடி இராணுவ கண்காட்சியை துவங்கிவைத்து பேசினார். இதையடுத்து, டெல்லி திரும்பிய பிரதமர் மோடியிடம் தமிழக பிரதமர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம்அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு கொடுத்தார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர். அடுத்த பருவகால பாசனம் ஜூன் 1 முதல் தொடங்க உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.