காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துடன், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது. 


முன்னதாக காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. 


இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூரைச் சேர்ந்தவர். 77 கிலோ பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது. 


ஏற்கெனவே, இவர் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த்தில் தங்கம் வென்ற நிலையில் இன்று இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.


சாதனை படைத்த சதீஷ்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின், சேவாக், இதேபோல் ஸ்டாலின், ஓ.பி.எஸ், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சதீஷுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில், சதீஷ்குமாருக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும், முதல்வர் பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ``தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இதேபோல் பல வெற்றிகளைக் குவித்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.