சியான் விக்ரமின் 52-வது பிறந்த நாள்! ஒரு பார்வை!
விக்ரம், தமிழ்த் திரைப்படங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் வினோத் ராஜு மற்றும் ராஜேஸ்வரி என்ற தம்பதியினருக்கு கடந்த 1966 ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்தார்.
விக்ரம், தமிழ்த் திரைப்படங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் வினோத் ராஜு மற்றும் ராஜேஸ்வரி என்ற தம்பதியினருக்கு கடந்த 1966 ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஆவார், இவரது தாய் ராஜேஸ்வரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர்.
தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் இவருக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.
பள்ளிப் பருவத்திலேயே திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்ட விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.
பின்னர், தன்னுடைய தந்தையாரின் கட்டாயத்தால் M.B.A படிப்பை இலயோலாக் கல்லோரியில் படித்து முடித்தார்.
கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான ''என் காதல் கண்மணி'' என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். பின்னர், தன்னுடைய நடிப்புத்திறனால் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுக் கொண்டார்.
இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார்.
அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ்நாடு மாநில விருதும் பெற்றுள்ளார்.
இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அதே ஆண்டில், வெளிவந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது.
இவர், தற்போது சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார்.