உகாதி பண்டிகையின் கொண்டாட்டத்திற்கு தலைவர்கள் வாழ்த்து!
நாடு முழுவதும் உள்ள மக்கள் உகாதி என்னும் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகிறார்கள். மஹாராஷ்டிராவில் உள்ள் மக்கள் குடி பத்வா எனும் திரு நாளாக இதனை கொண்டாடுகிறார்கள்.
பிரம்மா இந்த நாளில் பிரபஞ்சத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இதுவே இந்த திருவிழாவின் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறுவது வழக்கம்.
எனவே, மகாராஷ்டிராவில் தற்போது உகாதி திருநாள் களை கட்டி வருகின்றது. மக்கள் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடலுடன் தங்களது மகிழ்சியை தெரிவித்து வருகின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ‘‘யுகாதி தின’’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது...!
நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகிறார்கள். புத்தாண்டை கொண்டாடி வரும் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த வருடம் அனைவருக்கும் அற்புதமான ஓர் ஆண்டாக அமையும்," என்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘‘யுகாதி தின’’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
‘‘யுகாதி’’ என்னும் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘‘யுகாதி’’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்.....!
சாத்ரா சுக்லடி, உகாதி, குடி பத்வா, நவராத்திரி, சாஜிபு சீராவ்பா, செட்டி சந்த் போன்ற பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் சக குடிமக்களுக்கு இந்த சமயத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மாதிரியான விழாக்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருகின்றன. நம் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சகோதரத்துவத்தின் பிணைப்புகளை வலுப்படுத்திக்கொள்ளவும் இது உதவும்," என தெரிவித்துள்ளார்.
உகாதி திருநாள் கொண்டாடும் மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்:_
தெலுங்கு பேசும் மக்கள் உகாதி திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவது தமக்கு மகிழ்ச்சி என்றார். தெலுங்கு மக்களுக்கு வளம், நிலம் நிறைய வழியும் பொலிவும் சேர கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.