பிடதி விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்எல்ஏக்கள் காரில் புறப்பட்டனர். மேலும் கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 



 


கர்நாடகாவில் இன்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற இறுதிக்கட்ட தீர்பினையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.


இதையொட்டி பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார். 


அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டனர்.


இன்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.