தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்பிக்கள் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஆனால், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றியோ, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பற்றியோ மத்திய அரசு தெளிவான பதில் அளிக்கவில்ல. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் அறிவித்திருந்தனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் செய்து வரும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா என செய்தியாளர்கள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய தம்பிதுரை கூறியது, வெறும் 37 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. ஆனால் காங்கிரஸ் ஆதரவு அளித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் எனக் கூறியிருந்தார்.


காங்கிரஸ் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் -தம்பிதுரை


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை காங்கிரஸ் குழு தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக அரசுக்கு எதிராக மார்ச் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் கடிதம் கொடுத்துள்ளார்.


ஏற்கனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், காங்கிரசும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதற்கு அதிமுக அரசும் ஆதரவு தெரிவிக்குமா? என அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றனர்.