காங்கிரஸ் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் -தம்பிதுரை

காங்கிரஸ் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

Last Updated : Mar 23, 2018, 02:31 PM IST
காங்கிரஸ் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் -தம்பிதுரை title=

கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் குறிப்பாக 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணை பிற்பித்தது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்தும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில், அதாவது தீர்ப்பு வழங்கி 5 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் ஒரே வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதகான காலக்கெடு வரும் 29-ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு கூறி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அதிமுக எம்.பி-க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்பிக்கள் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும். மு.க ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் எனக் கூறுகிறார். ஆனால் வெறும் 37 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் எப்படி கொண்டு வர முடியும். குறைந்தது 54 எம்.பி.க்கள் இருந்தால் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இது மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தும் எங்களை குற்றம் சாட்டி வருகிறார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்க்காக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயார். காங்கிரஸ் ஆதரவு அளித்தால் மட்டுமே முடியும். மு.க ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி அளித்தால் ஆதரவு பெற்று தந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயார் என தம்பிதுரை கூரினார்.

Trending News