நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா மறைவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்!விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து  விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இவர், 10ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். விஷம் குடித்த ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரதீபா உடலை பிரேத பரிசோதனை செய்ய விடமாட்டோம் என்று அவரது உறவினர்கள் தர்ணா நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துவிட்டு, பிரதீபா உடலுக்கு உடற்கூறு சோதனை நடத்தினர். இதன்பிறகு, பெற்றோரிடம் பிரதீபா உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதீபாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 


இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அமுமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு, பிரதீபா உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதில், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.