சிக்மங்களூர்: சிக்மங்களூர் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பட்டிற்கு கொடுத்த ஆதரவினை தனக்கும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் எம் பாட்டியார் இந்திரா காந்தியின் பின் உருதுணையாக நின்றதுப் போல் எனுக்கும் உங்களது ஆதரவை அளியுங்கள் என கேட்டுக்கொண்டார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்தாவது...


சீனா நமது எல்லையில் ஹெலிபேட்களையும் விமான நிலையங்களையும் அமைத்து வருகிறது ஆனால் ஆளும் பாஜக அரசு இதுகுறித்து மௌனம் சாதித்து வருகிறது. பிரதமர் மோடி அவர்கள் மற்றவர்களின் மீது உள்ள ஊழல் வழக்குகளை மட்டம் நினைவில் வைத்திருக்கின்றார். அதே வேலையில் தன்னுடன் இருந்தவர்கள் ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்றுள்ளதை மறந்துவிட்டார் என தெரிவித்தார்.


உங்கள் ஆதரவினை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்பார்த்து வருகிறது. முன்னதகா சிருங்கேரி மடத்தில் உள்ள குழந்தைகளை சந்தித்து உரையாடினேன். பிரதமர் மோடியை விட அங்குள்ள குழந்தைகளுக்கு மதம் குறித்து நன்றாக அறிந்து வைத்து உள்ளார்கள்.


சத்திய மேவ ஜெயதே என்பதற்கான அர்த்தம் அறியாத பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறார்.   


கறுப்புப்பணத்தை மீட்டு மக்கள் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்றார் ஆனால் மாறாக மக்களுக்கு வரி சுமையினை மட்டுமே வழங்கி வருகின்றார். இன்னும் பொதுமக்கள் அவரது போலி வாக்குறுதிகளை நம்புவர் என தவறாக என்னுகிறது பாஜக அரசு.



ஆனால் கர்நாடக மக்கள் அவ்வாறு இல்லை, கர்நாடகாவில் காங்கிரஸ் நல்ல ஆட்சியினை வழங்கி வருகிறது. இந்த ஆட்சி மீண்டும் நீலும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்!