கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர் கொண்ட 2-வது பட்டியலை வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று வரும் கர்டாக்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலினை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.


இந்த பட்டியலின் மூலம் பதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையா அவர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது!



Pic Courtesy: twitter/@ANI