ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை... இன்று அம்பாளை ஆராதிக்கவும், சக்தியை வணங்கி முக்தியைப் பெறவும் உகந்த நாள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால், சொல்லி முறையிட்டால் குடும்பத்தில் நிம்மதி நீடித்து நிலைக்கச் செய்வாள் தேவி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதங்களிலே நான் மார்கழி என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னால், அம்பிகைக்கு உரிய மாதம் ஆடி. ஆடி மாதத்தில் உலகெங்கும் சக்திதேவியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும்.


ஆடி மாதம் முழுவதுமே அம்பிகையைக் கொண்டாடலாம் என்றாலும், ஆடி வெள்ளி மிகவும் சிறந்தது. செவ்வாயும், வெள்ளியும் அன்னைக்கு உகந்த நாட்கள். வீடுகளிலும் ஆலயங்களிலும் இந்த இரு தினங்களிலும்  வழிபாடு சிறப்பாக நடைபெறும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் அன்னையை வழிபட்டு, மாங்கல்ய பாக்கியம் பெற்று, அதை நிலைக்கச் செய்வார்கள்.


அம்மன் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு புடவை, ஆடை மற்றும் மங்கலப் பொருட்களும் கொடுத்து ஆசி பெறுவார்கள். ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட்டால், கணவரின் ஆயுள் பெருகும். குடுமபத்தில் மங்கல காரியங்கள் தங்கு தடையில்லாமல் நடைபெறும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.


ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட்டால், ஏழ்மையை அகற்றி, சகல செளபாக்கியங்களையும் அருளி இனிதான வாழ்க்கையை அமைத்துத் தருவாள் மகாசக்தி.


ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஐந்துமுகம் கொண்ட விளக்கு ஏற்றி வைத்து, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது வீட்டில் அன்னையை தங்க வைக்கும், செல்வத்தை தக்க வைக்கும்.  பால் பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என இனிப்புப் பொருட்களை அன்னைக்கு படைத்து பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகிக்கலாம்.  செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.


ஆடி மாதம் என்றாலே, கூழ் உற்றுவது என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கம். ஆலயங்களில் அகிலாண்ட நாயகியை, ஆதிபராசக்தியை அலங்கரித்து பக்தர்களின் உள்ளம் குளிரச் செய்வார்கள்.  ஆடியில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா என பக்தி கரைபுரண்டு ஓடும்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது முன்னோர் வாக்கு.... ஆடி வெள்ளியில் அன்னையை வணங்கி வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்...


Read Also | கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்... கடினமான காரியங்களும்  எளிதாக  முடியும்...