திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கியுள்ளது திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதிலும் இருந்து  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாகவும், விசேஷ நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாலும், திருப்பதி வரும் பக்தர்கள் பட்டிகளில் அடைக்கப்பட்டு பின்னர் குழு குழுவாக தரிசணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். 


மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 முதல் துவங்கி வருகின்ற ஜூலை 16வரை கடைபிடிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.


இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கீடு செய்து அன்றே சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30,000 டிக்கெட்டுகளும், திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் 20,000 டிக்கெட்டுகளும், புதன், வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 170,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.