Shocking Attack: பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் மீது தாக்குதல் நடத்திய செய்தி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலய இடிப்பு வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, சனிக்கிழமை மாலை, புராண கிலா பகுதியில் உள்ள ஆலயத்தின் படிக்கட்டுகளையும் கதவுகளையும் 10-15 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி உடைத்தது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இந்து கோயில் மீது மீண்டும் இலக்கு வைத்து தாக்குதல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான கோயில் மீது அடையாளம்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
பழமையான இந்த கோயில் பழுது பார்கக்ப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, 10-15 பேர் கொண்ட குழு கோயிலைத் தாக்கி, கோவிலின் படிக்கட்டுகள், கதவுகள் மற்றும் கதவுகளை உடைத்தனர். இந்த வன்முறை சம்பவம் சனிக்கிழமை மாலையன்று நடைபெற்றது.
பாகிஸ்தான் செய்தி இதழான Dawn இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. ETPB வடக்கு மண்டலத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொடுக்கும் ராவல்பிண்டி காவல் நிலையத்தில் ஆலய இடிப்பு தொடர்பாக புகாரளித்துள்ளார்.
Also Read | பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்
அதில், இங்குள்ள இந்துக் கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. கோயிலுக்கு முன்னால் இருந்த சில ஆக்ரமிப்புகள் நீக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கோவிலில் இன்னமும் சிலை வைக்கப்படவில்லை, மத சடங்குகளும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் கோயிலுக்கு சேதம் விளைவிக்கபட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கோரியுள்ளார்.
இந்த புகாருக்குப் பிறகு, ராவல்பிண்டி போலீசார் விரைவில் அங்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர் என்று கோயில் நிர்வாகி ஓம் பிரகாஷ் கூறினார். தற்போது கோவில் நிர்வாகி ஓம் பிரகாஷின் வீட்டிற்குக்ம், கோயிலுக்கும் அவரது வீட்டிற்கும் வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பே பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தகக்து.
Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR