தமிழ்நாட்டில் தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், வாக்குப்பதிவு நாளுக்கு ஒரு வாரம் கூட இல்லை. பரபரப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலும், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பிஜேபியின் சார்பில் போட்டியிடும் திருமதி குஷ்பு சுந்தர் சிறப்பு பேட்டி தர ஒப்புக் கொண்டார்.
பிரபல சினிமா நடிகையான அவருக்கு, மக்களிடம் செல்வாக்கு அதிகமாக உள்ளதோடு, வாக்காளர்கள் அவரை தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கின்றனர்.
அரசியலில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் திருமதி குஷ்பு சுந்தர், இப்போது பாஜக வேட்பாளராக களத்தில் நிற்கிறார். இந்த வாரக் கடைசியில் பிஜேபியின் மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஆயிரம் விளக்குகள் தொகுதியில் திருமதி குஷ்பு சுந்தருக்காக பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீ மீடியா: ஆயிரம் விளக்குகள் தொகுதியில் பாஜகவின் பிரசாரத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
குஷ்பு சுந்தர்: எங்கள் பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, பெண்கள் என்னை வெற்றிபெறச் செய்ய விரும்புகிறார்கள், ஒரு பெண்ணாக நான் அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பை என்னால் நன்றாக உணர முடிகிறது. என்னுடைய கூட்டங்களுக்கு பெருமளவிலான பெண்கள் கூட்டம் வருவதிலிருந்து நீங்களும் அதை புரிந்துக் கொள்ளலாம். பாஜக ஒருபோதும் வெல்ல முடியாது என்று எதிர் தரப்பினர் முதலில் சொன்னார்கள், ஆனால் இப்போது மக்களின் மனதிலும் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜீ மீடியா: தமிழ்நாட்டில் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்குமா?
குஷ்பு சுந்தர்: 2019இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது 303 இடங்களில் வெற்றி பெற்று மக்கலின் மிகப்பெரிய ஆதரவை பாஜக வென்றது, சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்களிக்கா விட்டால் இது எப்படி சாத்தியமாகும்? சிறுபான்மை சமூகத்தை சார்ந்த பெண்களைப் பொருத்தவரை, பிரதமர் நரேந்திர மோடியை மூத்த சகோதரராகவே பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். பெண்களுக்கு அவரது ஆட்சியில் மதிப்பு அதிகரித்துள்ளது, இது அவர்களுக்கு பலம் அளிப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
ஜீ மீடியா: ஒரு பெண் தலைவராக, எதிர்க்கட்சியினர் அண்மையில் கூறிய தவறான கருத்துக்கள் குறித்து உங்கள் எண்ணம் என்ன?
குஷ்பு சுந்தர்: எதிர்கட்சிகளின் இரட்டை வேடம் கலைந்துவிட்டது. ஒருபுறம், பெண்களுக்கு உதவுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாகவும் கூறும் அவர்களின் பொய் முகம், பெண்களைப் பற்றிய அவர்களது இழிவான கருத்துக்களால் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அத்தகைய நபர்கள் பெண்களுக்கு பாதுகாப்பான, இணக்கமான சூழலை எவ்வாறு உருவாக்க முடியும்?
Also Read | ”கடவுளின் எச்சரிக்கை” அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா?
ஜீ மீடியா: நீங்கள் போட்டியிடும் தொகுதி தங்களது கோட்டை என திமுக கூறுகிறது. உங்கள் தேர்தல் அறிமுகத்தில் ஒரு பிளாக்பஸ்டரை நீங்கள் முன்கூட்டியே எதிர்பார்க்கிறீர்களா?
குஷ்பு சுந்தர்: மக்கள் எங்களுடன் இருப்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இங்கு போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) 10 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் தொகுதிக்கு (Kolathur constituency) தாவினார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இங்கே தோற்று விடுவோமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் அவர் தொகுதி மாறினார். அதிமுக (எங்கள் நட்பு கட்சி) இங்கு பல முறை வென்றுள்ளது, இந்தத் தொகுதி தங்களது கோட்டை என சொல்வது திமுக தான். அது உண்மையாக இருந்தால், மு.க.ஸ்டாலின் ஏன் வேறொரு தொகுதிக்கு மாறினார்?
ஜீ மீடியா: தேர்தலுக்குப் பிறகு நடிகர்கள் தங்கள் தொகுதிகளையும் மக்களையும் மறந்து விடுவார்கள் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கு உங்கள் பதில் என்ன?
குஷ்பு சுந்தர்: இந்த கருத்துக்கள் குடும்ப அரசியலை பின்னணியாக கொண்டவர்களின் இருந்து வந்தவை என்று நினைக்கிறேன். அவர் தனது கண்ணோட்டத்தின் மூலம் விஷயங்களைப் பார்க்கிறார். அபிவிருத்தி, பாதுகாப்பு, சாலைகள், வேலைவாய்ப்பு, நீர் விநியோகம் என பல விஷயங்களிலும் தங்கள் தொகுதிகளை புறக்கணிப்பவர்கல் அவர்கள். அவர்கள் தங்கள் முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் தமிழகத்தின் அரசியல் வரலாற்றை நினைவு கூர்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் மெகாத் தலைவர்களான கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் என்பதை தங்களுக்கு வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR