ராசிபலன்: மனத்தில் நினைக்கும் அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்!!
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........
மேஷம்:
இன்று குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ரிஷபம்:
இன்று உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
மிதுனம்:
இன்று பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கடகம்:
இன்று ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
சிம்மம்:
இன்று சேமிப்பு உயரும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
கன்னி:
இன்று கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
துலாம்:
இன்று சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
விருச்சிகம்:
இன்று ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
தனுசு:
இன்று சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
மகரம்:
இன்று பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
கும்பம்:
இன்று உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
மீனம்:
இன்று பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆயின் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6