புதுடெல்லி: திருப்பதி ஏழுமலையான் என்றால் கைகூப்பி தலை தூக்கி வணங்கத் தோன்றும். அதிலும் இன்று புரட்டாசி மாத அமாவாசை. புராட்டாசி மாதம் வெங்கடவனுக்கு உகந்தது. நாளை முதல் ஒன்பது நாட்களும் நவராத்திரி உற்சவங்கள் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இன்று அமாவசை நாள் என்பதோடு, வெள்ளிக்கிழமையாகவும் இருப்பதால், இன்று அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு  விசேஷ சாத்து முறை ஒன்று நடைபெற்றது. இந்த  சாத்துமுறையின் போது, அலங்காரப் பிரியனான கோவிந்தனுக்கு எந்தவித அலங்காரமும் செய்யப்படுவதில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்  என்பது தெரியுமா?


வழக்கமாக சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் வில்வ இலை கொண்டு, ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது என்பதும் மார்கழி மாத அர்சனையிலும் வில்வம் உபயோகப்படும் என்பதும் பலருக்கும் தெரியாத தகவல். 
அதேபோல், சிவராத்திரி அன்று நடைபெறும் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்சவத்தன்று உற்சவ மூர்த்தி தனது நெற்றில் வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டையை சாற்றிக் கொண்டு திருவீதி உலா வருவார். 


Also Read | கோயில் கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!


ஏழுமலையில் வீற்றிருக்கும் வேங்கடேசனைபரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடிய தாளப்பாக்கம் அன்னமய்யா, அந்த காலத்தால் போற்றப்படும் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்.  
திருப்பதி பெருமாளை வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெறுவதாக  கூறப்படுகிறது.   
ஏழுமலையான் என்று அடிக்கடி சொல்கிறோமே அந்த பெயருக்கு காரணமான ஏழு மலைகளின் கதை தெரியுமா? ஆதிசேஷனை தனது படுக்கையாக கொண்ட பெருமான், பாற்கடலை விட்டு  கிளம்பிய போது, சேஷாத்ரி  எனப்படும் ஆதிசேஷன் இங்கு வந்து மலையாக தாங்கினான் எனவே முதல் மலை சேஷாத்ரி என்று அழைக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்தி | திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் முடி காணிக்கையின் மதிப்பு என்ன? தெரியுமா?


  • வேதாத்ரி (நாராயணாத்ரி)– வேதங்களே மலை வடிவில் வந்து வேங்கடவனை துதிக்கின்றன என்பதால் வேதாத்ரி.

  • கருட வாகனத்தில் பயணிக்க விரும்பும் கரிய பெருமாளை, மலை வடிவில் வந்து கருடன் சுமக்கிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கருடாத்ரி.

  • விருஷபாசுரனை ஐயன் வதம் செய்ததால் விருஷபாத்ரி.

  • அன்னை அஞ்சனையின் தவத்தால் பெற்ற அணுக்கச் சீடன் ஆஞ்சநேயனின் அன்னையின் பெயரால்  அஞ்சனாத்ரி 

  • திருப்பதி பெருமாளுக்கு முடிக் காணிக்கை கொடுக்கும் பாரம்பரியம் தொடர்வதற்கான காரண கர்த்தாவான நீலாதேவியின் பெயரால் நீலாத்ரி  

  • பாவங்களை நாசமாக்கி, ஆனந்தத்தை அனைவருக்கும் நல்க நாராயணன் ஆனந்தமாக காட்சியளிக்கும் மலை வேங்கடாத்ரி எனப்படும் ஆனந்தாத்ரி..


Read Also | என்னது நந்தி சிலை இல்லாத ஒரு சிவாலயமா?... இது எங்க இருக்கு... சிறப்பு என்ன?..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR