நாம் இறைவழிபாட்டின் போது ஆரத்தி காட்டுவது என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பழக்கம் ஆகும். நாம் கோயிலுக்கு சென்று பூஜை செய்தாலும் சரி, வீட்டில் இறைவனை வழிபட்டாலும் சரி அதில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் கண்டிப்பாக இடம் பெரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் அனைவரும் இறைவழிபாட்டிற்காக கோவிலுக்கு செல்வது உண்டு. கோவிலுக்கு சென்றால் மன நிம்மதி கிடைக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். அது எழுதிவைக்கப்படாத உண்மை. நாம் கோவிலுக்கு சென்றால் மன நிம்மதியுடன், நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கிறது. 


கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன.


அது மட்டும் இன்றி நாம் வீட்டிலும் சரி கோயில்களிலும் சரி பூஜையின் போது மணியடிப்பது வழக்கம். அப்படி மணியடிப்பது எதற்காக என்று உங்களுக்கு காரணம் தெரியுமா?.  


கோயில்களில் மணியடிப்பதற்கான காரணம்.....! 


மணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொமிருத்து கேட்டால் இந்த நாதத்தைக் கேட்கலாம். இதற்கு எல்லாம் நானே என்பது பொருள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை உணர்த்துவதே மணிச்சத்தம்.