இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். நாம் தினசரி கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் அனைவரும் இறைவழிபாட்டிற்காக கோவிலுக்கு செல்வது உண்டு. கோவிலுக்கு சென்றால் மன நிம்மதி கிடைக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அது எழுதிவைக்கப்படாத உண்மை தான். நாம் கோவிலுக்கு சென்றால் மன நிம்மதியுடன், நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கிறது. 


கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன.


கோயிலின் பொருள்...! 


கோயில் என்ற சொல் கோ + இல் எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. 


கோ - என்பது இறைவன்.


இல் - என்பது இல்லம் அல்லது வீடு.  


எனவே கோயில் என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் கோயில் மற்றும் கோவில் என்ற இரு சொற்களும் உண்டு. தமிழ் இலக்கண விதிப்படி கோவில் என்றே வருகிறது.


கோயிலின் வேறு பெயர்கள்...!


தேவஸ்தானம், அம்பலம் போன்ற சொற்களும் கடவுளை வணங்கும் இடத்தினை குறிக்கும். கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு பெயரும் உண்டு. ஆலயம் என்னும் சொல் "ஆன்மா லயப்படுகின்ற இடம்", "ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்" என்ற பொருள் கொண்டது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


பண்டைய எகிப்தில், ப்ர் (pr) என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது. இதனால் அங்கே இக்கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன என்பது பெறப்படுகின்றது. இத்தகைய கட்டிடங்களைக் குறிக்கும் சொற்கள் பல மொழிகளிலும், சொற்பிறப்பியல் அடிப்படையில் பல்வேறு பொருள் உணர்த்துவனவாக இருந்தாலும், தற்காலத்தில் பல்வேறு சமயத்தினருடைய இறைவணக்கத்துக்கான இடங்களைக் குறிக்க அவை பயன்படுவதை அறியலாம். 


கோயிலில் இறைவனின் கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பதை நாம் அனைவரும் கண்டுள்ளோம். அது எதற்காக வைத்துள்ளனர் என்று தெரியுமா?. சரி, அதை பற்றி பார்க்கலாம்! 


கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பதன் காரணம்...! 


சுவாமிக்கு மூன்று கண்கள் உண்டாம். வலக்கண் சூரியனாகவும், இடக்கண் சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் உள்ளன. இதில் சூரியசந்திர பார்வை நம் மீது பட்டால் நல்லது. நெற்றிக்கண் நெருப்புப்பார்வை நம் மீது விழாமல் இருக்க கண்ணாடி வைத்துள்ளனர்...!