விரதங்களின் வகைகள் என்ன? அவற்றால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?
நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் கடவுளை துதித்து இருப்பது விரதம். நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் தேவைக்கு ஏற்றவாறும், நம் விருப்பமான தெய்வத்தை வழிபடுவதும் இயல்பானதே.
நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் கடவுளை துதித்து இருப்பது விரதம். நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் தேவைக்கு ஏற்றவாறும், நம் விருப்பமான தெய்வத்தை வழிபடுவதும் இயல்பானதே.
விரதங்களில் பல வகையான விரதங்கள் அவற்றில் சில:
உமிழ் நீரைக் கூட விழுங்காமல் இருக்கும் விரதம். யோகிகளால் எடுக்கப்படும் விரதம் இது.
தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் இருப்பது.
பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருப்பது.
தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
காலையில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி உபவாசம் இருப்பது
மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
Also Read | ராசிபலன்: நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.!
பகல் நேரத்தில் ஒருவேளை உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.
மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உண்ணா நோன்பு இருப்பது.
மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
21 நாட்கள் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது
Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 24ஆம் நாள், மாசி 12, புதன்கிழமை
பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
இரவில் மட்டும் பசும் பால் சாப்பிட்டு விரதம் இருத்தல்.
மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
நாள் முழுவதும் நீரை மட்டுமே பருகி விரதம் இருத்தல்.
Also Read | நேபாளம் அதிரடி முடிவு! மலிவான பெட்ரோலைத் தேடி வரும் இந்தியர்களுக்கு ஆப்பு!
நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.
தேய்பிறை நாளன்று தொடங்கி, வளர்பிறை முடிந்து மீண்டும் தேய்பிறை வரும் வரை தினம் ஒருபிடி உணவை மட்டும் சாப்பிட்டு வருவது.
இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
இவை இந்து மதத்த்தில் பொதுவாக அனுசரிக்கப்படும் விரதங்களின் வகைகள். அவரவர மதம் மற்றும் வழக்கத்திற்கு ஏற்றவாறு வகைகள் இன்னும் மிகவும் அதிகமாக இருக்கும்.
Also Read | ஆசிர்வாதம் என்பதன் அடிப்படை என்ன? அது எவ்வாறு செல்வங்களைப் பெற வழி வகுக்கும்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR