கொரோனா பெருந்தொற்றினால் உலக நியதிகளும் நடைமுறைகளும் மாறியுள்ள நிலையில், ஆன்மீகத் தளங்களும், வழிபாட்டுத் தலங்களும் அதில் இருந்து தப்பவில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தாக்கமானது, பக்தர்களுக்கான ஆலயக் கதவையும் மூடவிட்டது. ஆனால் ஆலயங்களை திறப்பது தொடர்பான முடிவுகளை இன்னும் நீண்ட காலத்திற்கு ஒத்திப் போடுவது சாத்தயமல்ல.  


கொரோனா வைரஸ், மக்களின் இயல்பு வாழ்க்கையை மட்டுமா மூடியது? பக்தர்களுக்காக ஆலயக் கதவுகளையும் மூடியது. ஆலயத்தை நம்பி வாழ்வாதரத்தை அமைத்துக் கொண்ட எண்ணற்றவர்களின் வயிற்றிலும் அடித்தது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்கான விலக்கு அளிக்கப்பட்டபோது அமைதியாக இருந்தவர்களுக்கு, மதுக்கடைகளை திறக்கவும், மதுவை ஆன்லைனில் விற்கலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.


எனவே, மத வழிபாட்டுத் தளங்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகள் பக்தர்களுக்காக கடவுளின் கதவுகளை திறப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


உலகின் பணக்கார கடவுளான திருப்பதி பெருமாள் ஆலயத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) அறக்கட்டளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட தேசிய முடக்கத்தின் காரணமாக "வீடியோ-கான்பரன்சிங்" மூலம் பல்வேறு குழுக்களின் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.


இந்த ஆன்லைன் கூட்டங்களின் போது, ​​TTD வாரியத் தலைவர் YV சுப்பரெட்டி மற்றும் உள்ளூரிலிருப்பவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே திருமலை அன்னமய்ய பவனில் கூட்டத்தில் நேரிடையாக வந்து கலந்துக் கொள்வார்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் வீடியோ மூலமாக  கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இதற்காக, டி.டி.டி அறக்கட்டளையின் IT பிரிவு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்.


COVID-19 பெருந்தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக, மார்ச் 20 முதல் ஆலயங்களில் பக்தர்களுக்கான தரிசனங்கள் தடை செய்யப்பட்டன.  இதன் பிறகு நாட்டில் பொது முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்காக ஆலயக் கதவுகள் அடைக்கப்பட்டன. ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா என்று இறைவனைச் சரணடையும் பக்தர்கள், நிர்கதியாய் வீட்டு தெய்வங்களிடம் முறையிட்டு முடங்கிப் போனார்கள்.


இது மட்டுமல்லாமல், நான்காம் கட்டமாக அமலில் இருக்கும் லாக்டவுன் எனப்படும் பொது முடக்கநிலை முடிவுக்கு வந்த பிறகு எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் திருப்பதி கோவில் அறக்கட்டளை ஆலோசித்து, அதற்கேற்றாற்போல் தயாராகிவருகிறது.   


இதற்கிடையில், திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அவுட்சோர்ஸ் ஊழியர்கள் திருமலையின் நுழைவாயிலில் உள்ள திருப்பதி அலிபுரி கருடா பகுதியில் போராட்டம் நடத்தினார்கள்.


அவுட்சோர்ஸ் சேவைகளுக்கான ஆந்திரா கார்ப்பரேஷனுக்குள் (APCOS) அமைப்புடன், தேவஸ்தான அவுட்சோர்சிங் ஊழியர்களை  ஒன்றிணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.  


திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் பாதுகாப்பு வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.   சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், முதலமைச்சரிடம் பேசி, பிரச்சினையைத் தீர்ப்பதாக தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுப்பாரெட்டி உறுதியளித்தார். 


மொழியாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்