எதிர்வரும் ஜூன் மாதத்தில் இரண்டு கிரகணங்கள் நிகழும் என தகவல்...
நடப்பாண்டின் ஜூன் மாதத்தில், சூரியன் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் நிகழும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
நடப்பாண்டின் ஜூன் மாதத்தில், சூரியன் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் நிகழும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
தகவல்கள் படி 2020 ஜூன் 5-ஆம் தேதி சந்திர கிரகணமும், 2020 ஜூன் 21 அன்று சூரிய கிரகணமும் நிகழலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் கிரணகத்தின் போது நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது குறித்து இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். குறிப்பாக கிரகணத்தின் போது துளசி பயன்பாடு என்ன என்பதையும் பார்ப்போம்.
துளசி இலை பல்வேறு நற்குணங்கள் கொண்டது. கிரகணம் பீடிக்கும்போது, துளசியால் நமக்கு கிடைக்கும் அற்புதமான சில நன்மைகளை அறிந்து கொள்ளுவோம்.
சூரியனின் நிழலுக்குள் பூமி வரும்போது, பூமியின் பின் சந்திரன் மறைந்து விடும். அந்த சமயத்தில் வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்படும். இதுதான் சந்திர கிரகணம் எனப்படும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் என மூன்று கிரகங்களும் நேர் கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் ஒளி, சந்திரனின் மீது படாத நிலையை சந்திர கிரகணம் என்கிறோம்.
நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து சந்திர கிரகணத்தின் நிலையும், கால அளவும் வேறுபடும். பூமியைச் சந்திரன் சுற்றும் போது பெனும்ப்ரா என்னும் நிழலின் வழியாகச் செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது இந்து மதத்தில் மத ரீதியிலான சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நேரடியாக கண்களுக்கு தெரியாத சந்திர கிரகணத்திற்கு மத ரீதியில் எந்தவிதமான முக்கியத்துவம் இல்லை. நிழலுடன் காணப்படும் சந்திர கிரகணம் மட்டுமே கண்களுக்கு தென்படுவதில்லை, எனவே இந்த மத பஞ்சாங்கத்திலும் அதற்கு பெரிய அளவில் முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. நிழலுடன் ஏற்படும் சந்திர கிரகணம் மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பதால் அதற்கு மட்டுமே பஞ்சாங்கங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நாம் வசிக்கும் நகரத்தில் சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும், சந்திர கிரகமானது, பிற நாடுகளிலோ அல்லது நகரங்களிலோ மட்டுமே தெரியும் என்றால், கிரகணம் தொடர்பான சடங்குகள் எதுவும் செய்யப்படுவதில்லை. ஆனால் வானிலை காரணமாக சந்திர கிரகணம் தெரியவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் சந்திர கிரகணத்தின் போது பின்பற்றப்படும் சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு கிரகணம் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சந்திர கிரகணம் தொடர்பான முக்கிய நேர விவரம்.
ஜூன் 5 ஆம் தேதி அன்று இரவு 11:15 மணிக்கு தொடங்கும்
ஜூன் 6 தேதி காலை 2:34 மணி வரை தொடரும்.
சந்திர கிரகணத்தின் மொத்த நேரம் - 3 மணி நேரம் 18 நிமிடங்கள்
இயற்பியலைப் பொறுத்தவரை, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சந்திரனுக்குப் பின்னால் சூரியனின் பிம்பம் சிறிது நேரம் மறைவதை சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை சந்திரன் சுற்றுகிறது. சில நேரங்களில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும். அப்போது, நிலவு சூரியனை மறைக்கும் போது, பூமியில் சூரியனின் கதிர்கள் விழுவதில்லை. அப்போது, நிலவின் நிழலில் சூரியன் முழுமையாகவோ, பகுதியாகவோ மறைவதை சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.
இந்த சூரிய கிரகணம் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், செளதி அரேபியா, யுஏஇ, எத்தியோப்பியா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் தெரியும்.
டெஹ்ராடூன், சிர்சா மற்றும் தெஹ்ரி ஆகிய இடங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தென்படும். புது தில்லி, சண்டிகர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், லக்னோ, சென்னை, சிம்லா, ரியாத், அபுதாபி, கராச்சி, பாங்காக் மற்றும் காத்மாண்டு ஆகியவற்றில் சூரிய கிரகணம் ஓரளவு தெரியும். இந்த சூரிய கிரகணம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து தெரியாது.
இவை தவிர, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் வேறு சில ஐரோப்பிய கண்டங்களில் இந்த சூரிய கிரகணம் தென்படாது.
சூரிய கிரகணம் உள்ளூர் நேரம்.
ஜூன் 21-ல் ஆண்டின் முதல் சூரிய கிரகணமாக நிகழ்கிறது.
ஜூன் 21ம் தேதி காலை 10.20 மணிக்கு தொடங்கும், நண்பகல் 122:02க்கு உச்சமடையும்
கிரகணம் முடிவு நேரம் - மதியம் 01: 49.
சூரிய கிரகணத்தின் மொத்த நேரம் - 5 மணி நேரம், 48 நிமிடங்கள் 3 வினாடிகள்.
மொழியாக்கம்: அருள்ஜோதி அழகர்சாமி