ஹஜ் பயணத்திற்கான GST 18%-ல் இருந்து 5%-மாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஹஜ் பயண விமான கட்டணம் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லியில் புதிய ஹஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் "இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரைக்கான GST குறைக்கப்பட்டுள்ளாதால், இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விமான கட்டணம் கணிசமாக குறையும்" என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஹஜ் பயணத்திற்கான GST 18%-ல் இருந்து 5%-மாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயண விமான கட்டணம் கணிசமாக குறையும். கட்டணத்தில் சுமார் ₹113 கோடி மீதமாகும் என்று கருதுகிறோம். 


ஆண் துணை இன்றி ஹஜ் பயணம் செல்ல இந்த ஆண்டு 2,340 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார்.


முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் நாள் டெல்லியில் நடைப்பெற்ற GST கவுன்சில் கூட்டத்தில், GST வரி வீதத்தில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டு வரிக் குறைப்பு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பபின் படி சினிமா டிக்கெட் கட்டணம், LED  டிவி, கம்ப்யூட்டர் மானிட்டர், பவர் பேங்க் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டது.


ஆடம்பர பொருள்கள், உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பொருள்கள், சிமெண்ட், பெரிய திரை கொண்ட டிவி,  ஏசி ஆகியவை அதிகபட்சமாக 28% வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டன. அதேவேலையில் இசைப்புத்தகங்கள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றுக்கு  ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.


மேலும் டிஜிட்டல் கேமிரா, விடியோ கேமிரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28%-லிருந்து 18%-மாக குறைக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருள்கள், நிலக்கரி சாம்பலில் தயாரிக்கப்பட்ட செங்கல், வாக்கிங் ஸ்டிக், பளிங்கு மார்பில் ரபிள் உள்ளிட்டவை மீதான வரி 28%-லிருந்து 5%-மாக குறைக்கப்பட்டது. இந்த GST குறைப்பு ஆனது கடந்த ஜனவரி 1.,-ஆம் நாள் முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.