கும்ப மேளா விழா ஏற்பாடுகளின் ஒருபகுதியாக கட்டப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறக்கு தளம் திடீரெட இடிந்து விழுந்தது. 5 நாட்களில் உலகபுகழ் பெற்ற கும்ப மேளா நடைப்பெற்றுள்ள இந்த விபத்து, அசம்பாவித அறிகுறியாக பார்க்கப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15-ஆம் நாள் துவங்கி வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. எதிர்வரும் விழாவை முன்னிட்டு ₹4300 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 250சதுர கிமி பரப்பளவில் தனிவொரு தற்காலிக நகரத்தினை ஏற்பாடு செய்துவருகின்றனர்.


இதன் ஒருபகுதியாக, விழாவிற்கு வரும் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை இறக்குவதற்கு ஏதுவாக ஹெலிப்போர்ட் எனப்படும் இறக்குதளம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து விழ்ந்தது. கட்டிட இடிபாடுக்குள் இரண்டு தொழிளாலர்கள் சிக்கி கொண்டதாகவும், பின்னர் இருவரும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பிரியகராஜில் கும்ப மேளா வரும் ஜனவரி 15-ஆம் தேதி துவங்கி மார்ச் 4-ஆம் நாள் வரை நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது. 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு' பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலக புகழ் பெற்ற இந்த விழாவில் கலந்துக்கொள்ள சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு கும்பமேளாவிற்கு 12 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தாயகம் வரும் மக்களுக்கு ஏதுவாக உலகின் மிக பெறிய தற்காலிக குடியிறுப்பு கிராமத்தை உருவாக்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவுசெய்துள்ளார். 


அதேப்போல் பிரியாகராஜ் வரும் மக்களின் பாதுக்காப்பு பணிக்காக, சுமார் 20,000 சைவ காவலர்களை பயன்படுத்த உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.