வழிபாட்டிற்காக கோயிலுக்கு செல்லும் போது நாம் நாம் செய்ய வேண்டிய அடிப்படையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.


கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை (Flagpole) வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.


ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.


பலிபீடத்தின் (Altar) முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.


இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.


இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.


தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும். 


சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.


ALSO READ | “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்!


தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.


தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும். பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.


முருகன்
நடராஜர்
தட்சிணாமூர்த்தி
துர்க்கை
சண்டிகேஸ்வரர்


மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.


கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாட்டின் நிறைவாக சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்து,இறை சிந்தனையுடன் வெளியேற வேண்டும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR