புதிய ராமர் கோயிலுடன் அமையும் சர்வதேச அயோத்தி எப்படி இருக்கும்?...
தடைகள் பலவற்றைக் கடந்து உருவாகவிருக்கும் புதிய ராமர் கோயிலுடன் மிகச்சிறப்பான சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக புதிய அயோத்தி தோற்றம் பெறப்போகிறது.
சரயு நதிக்கரையில் உள்ள அயோத்தியின் மகிமை, உலகத்துக்கு தெரிந்துவிட்டது. திரேதா யுகத்தின் நந்தன் ஸ்ரீராமபிரான் இந்த தீபாவளியை அங்கு மிகச் சிறப்பாக கொண்டாடினார். இப்போது ராமபிரான் தான் பிறந்த இடத்தில் கோலாகலமாக மீண்டும் வாழ்வார். ராமர் கோயிலை கட்டுவதன் மூலம் அயோத்தி நகரம், உலகம் எல்லாம் பிரபலமாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கான வாய்ப்பு உறுதியாகிவிட்டது... அதே நேரத்தில், உலகம் முழுவதும் வாழும் பக்தர்களின் மனத்திலும் புதியதொரு நம்பிக்கையும் பிறந்து விட்டது. ராமபிரான் அங்கு வீற்றிருப்பதால், அயோத்தி நகரம், உலகின் புகழ்பெற்ற ஆன்மிக நகரமாக நிச்சயமாக உருவெடுக்கும்.
அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்ற செய்தி, உலகில் புதிய சிந்தனையை தூண்டியுள்ளது. ஹிந்துக்கள் எல்லோருக்குமே அது மிகவும் புனிதமான விஷயமாகும்…
ராமர் கோயிலை கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்போகின்றன…அப்படி, புதியதொரு ராமர் கோயிலை கட்டுவதால் அயோத்தி நகரத்தின் சூழ்நிலை எப்படி இருக்கும் என்று யோசித்தால் பரவசமாக இருக்கும்.
அடுத்துவரும் சில மாதங்களில் ராமரின் அயோத்தி நகரம் ஜொலிக்கப்போகிறது… புத்தம்புது காப்பியாக அயோத்தி மாநகரம் மாறப்போகிறது… உலக மக்கள் எல்லாம் ஆச்சரியப்படுவார்கள்… அந்தப் புதிய பொலிவு எப்படியெல்லாம் இருக்கப் போகிறது என்று!.. சரயு நதிக்கரையில் ஒலிக்கப்போகும் ராமபிரானின் பக்திப்பாடல்கள் உங்களை பரவசப்பட வைக்கப் போகிறது தெரியுமா…!
இரவின் இருண்ட பின்னணியிலும் பிரகாசமாக காட்சியளிக்கப் போகும் அயோத்தி நகரம் உங்கள் கனவில் வரப்போகிறது…
இனி அயோத்தி நகரத்திலிருந்து எல்லா நாடுகளுக்கும் நீங்கள் பறந்து செல்லப் போகிறீர்கள்… அதுமட்டுமல்ல நாட்டின் எல்லா ஊர்களையும் அயோத்தியோடு இணைப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரோடுகளை அங்கே சீக்கிரம் அமைக்கபோகிறார்கள்
இது வெறும் கனவு இல்லை… அயோத்தியின் மகிமை… அந்த மாநகரம் ஒரு சர்வதேச ஆன்மிக பூமியாகப் போகிறது… பக்தி மார்க்கம் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவப்போகிறது
அயோத்தியை பிரபலமான ஆன்மிகச் சுற்றுலா நகரமாக மாற்றுவதற்காக உத்தரப்பிரதேசத்தை ஆளும் முதல்வர் யோகி ஆதித்யாவும் பிரதமர் நரேந்திர மோடியும் சத்தியம் செய்திருக்கிறார்கள்.
அயோத்தியை எல்லா வசதிகளும் நிறைந்த நகரமாக மாற்றுவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அது பூலோக சொர்க்கமாக கண்டிப்பாக மாறத்தான் போகிறது…
அயோத்தி மாநகரம் ஒரு பெரிய சர்வதேச ஆன்மிகத் தளமாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் அமைவிடமானது எல்லா பெரிய நகரங்களையும் இணைக்கும் வகையில் இருப்பது அதன் சிறப்பம்சமாகும். அயோத்தியில் இப்போது ராமபிரான் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு தாற்காலிக கோயிலில் வீற்றுள்ளார்.
2018 முதல் இப்போது வரை சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வெளிநாட்டுகளில் இருந்து இங்கு வந்துள்ளனர். புதிய ராமர் கோயிலை கட்டுவது மட்டுமல்லாமல், அயோத்தி மாநகரை மிகச்சிறப்பான வகையில் உருவாக்க வேண்டும் என நகரமைப்பு நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்படிச் செய்தால் தினந்தோறும் 50 ஆயிரம் பக்தர்கள் வந்தாலும் அயோத்தி அதை தாங்கிக் கொள்ளும்.
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலை, உலகின் மிக அற்புதமான கோயிலாக வடிவமைக்கப் போகும் ஏற்பாடுகள் பற்றிய சிறப்புத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ராம ஜென்ம பூமி பட்டறையில் முதற்கட்டமாக அடிதளத்திற்கான கற்களை தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளன
அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோயிலின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை முதலில் பார்ப்போம்.
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் இரண்டடுக்கு கட்டடமாக இருக்கும். இந்த அற்புதமான கோயிலின் நீளம் 268 அடி, அகலம் 140 அடி மற்றும் உயரம் 128 அடி இருக்கும்.
மொத்தம் 212 தூண்கள் அமைக்கப்படும் அதில் 106 தூண்கள் முதல் தளத்தில் இருக்கும். ஒவ்வொரு தூணிலும் 16 சிலைகள் வடிக்கப்படும். கோயிலில் இரண்டு தளங்கள் இருக்கும்.
அதில் சிங்க வாயில், நடன மண்டபம், வண்ண மண்டபம், அறைகள், கருவறை மற்றும் பிரகாரங்கள் இருக்கும். கருவறையைச் சுற்றியிருக்கும் பிரகார நடைபாதையின் அகலம் 10 அடியாக இருக்கும்.
அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோயிலின் இந்த மாடலை நீங்கள் பாருங்கள். இந்த மாடலில் உள்ளதுபோல கோயிலின் தரை தள சந்நிதியில் ராமர் குழந்தை வடிவத்தில் காட்சியளிப்பார். மற்றொரு சந்நிதியில் 'ராமபிரான்' முழுவடிவில் அருள்பாலிப்பார்.
புதிய ராமர் கோயில் பிரமாண்டமாக இருக்கும்.
ராமர் கோயிலின் தரை தளத்தில், சிங்க வாயில், கருவறை, நடன மண்டபம், வண்ண மண்டபம் அமைக்கப்படும்.முதல் தளத்தில், ராமரின் அரசபை தர்பார் காட்சிகள் இடம் பெறும். கோயிலில் 24 நுழைவுவாயில்கள் இருக்கும். ராமர் கோயில் வளாகத்தில் 45 ஏக்கரில் ராமாயணக் காட்சிகள் சிலைகளாகவும் ஓவியங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். ராமாயணத்தை முழுவதும் விளக்கும் வகையில் 125 சிலைகள் நிறுவப்படும்.
கோயிலின் கட்டுமான ப்ளூ பிரிணட் வரைபடத்தின் அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் முனைப்போடு செய்யப்படுகிறது.
புதிய ராமர் கோயிலை நிர்மானத்தை செயல்படுத்தும் ஓர் அறக்கட்டளையை அடுத்த மூன்று மாதங்களுக்குள், அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராமர் கோயிலின் கட்டுமானம் வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடங்கும் என்பது செய்தி.
அற்புதக் கோயில் அமைந்தபிறகு புதிய அயோத்தி எவ்வாறு உருவாகும் என்பதை சிந்தித்துப் பார்த்தால் பரவசமே ஏற்படும்.
அயோத்தியில் உலகின் மிக உயரமான ராமர் சிலை நிறுவப்படும் என்றும் அந்தச் சிலை 251 மீட்டர் உயரத்தில் இருக்கும் என்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
ராமபிரான் நீராடி விளையாடிய மற்றும் இறுதியில் ஜலசமாதி அடைந்த சரயு நதியின் தோற்றமும் வரும்காலத்தில் முற்றிலும் மாறியிருக்கும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கங்கை-யமுனையைத் தொடர்ந்து சரயு நதியையும் முற்றிலும் சுத்தப்படுத்தும் திட்டமும் மத்திய மாநில அரசுகளிடம் உள்ளது.
சரயுவின் கரையில் உள்ள படித்துறைகள், இனி வாராணசியின் படித்துறைகள் போல சிறப்பாகப் பராமரிக்கப்படும்.... அங்கு காலையிலும் மாலையிலும் செய்யப்படும் தீபாராதனையின்போது சரயு நதி புத்தொளியில் மிளிரப்போகிறது.
மேலும், சரயு நதியில் படகு சவாரி விடப்படும். அத்தோடு சொகுசான க்ரூஸ் கப்பல் பயணமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சரயு நதியில் உல்லாசமாக க்ரூஸ் கப்பல் சவாரி விடப்பட்டால் அது ஒருபுறம் சர்வதேச அயோத்தி என்ற பெயரை உலகுக்கு வழங்கும். மறுபுறம் வேலை வாய்ப்புகள் பெருகுவதுடன் அரசின் சுற்றுலாத்துறையின் வருவாயும் அதிகரிக்கும்.
ராமபிரான் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல… தெற்காசியாவில், நேபாளம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பாலி ஆகிய நாடுகளிலும் கூட ராமாயணத்தின் கதைகள் இன்றைக்கும் தொடர்ந்து எதிரொலிக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற செய்தியானது, இந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது… இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அயோத்தி ஒரு சிறப்பு ஈர்ப்பாக விளங்கும். இதை மனதில் வைத்து அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, 2014 ஆம் ஆண்டிலேயேஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ... விமானநிலையத்தை அமைப்பதற்காக இந்த ஆண்டு ஆகஸ்டில், முதல் தவணையாக இருநூறு கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விமான நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. அதே ஆண்டு மே மாதம் முதல் விமானங்களை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அயோத்தி ரயில் நிலையமும் ராமர் கோயிலின் வடிவத்தைப்பெறவுள்ளது.
ஆம்.
அயோத்தியில் ராமர் கோயில் மாடலில் புதிய ரயில் நிலையத்தை நூறு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் இது தயாராகிவிடும்.
ஆன்மிகச் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அயோத்தியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை அமைப்பதற்கு பல முன்னணி ஹோட்டல் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்த நிறுவனங்களின் ஆர்வத்துக்கு தூபம் போட்டுள்ளது.
விரைவில் புதிய அயோத்தியில் பல சொகுசு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை நீங்கள் பார்க்கலாம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதால், நாட்டின் மற்றும் உலகின் முக்கிய அன்மிக மையமாக இதை தரம் உயர்த்தும் திட்டமும் உள்ளது.
அயோத்தியிலிருந்து இருநூறு கிலோமீட்டர் சுற்றளவில் பிரயாகராஜ், வாராணசி, லக்னௌ, கோரக்பூர் போன்ற உத்தரப்பிரதேசத்தின் பிரபல ஆன்மிக தலங்கலும் அமைந்துள்ளன.
ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சமண மற்றும் பௌத்த மதங்களின் பல முக்கியமான யாத்திரைகள் இந்த ஐந்து நகரங்களின் எல்லைக்குள் வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் இந்த ஐந்து நகரங்களையும் சேர்த்து அன்மிக மற்றும் கலாச்சார அடிப்படையில் புதிதாக அயோத்தி சுற்றுலாக்களை உருவாக்க எதிர்கால அயோத்தியை மனதில் வைத்து, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த அயோத்தி சுற்றுலாத் திட்டத்தை அறிவிக்க முதல்வர் யோகி ஆதித்யானந்த் ஆர்வம் காட்டியுள்ளார்.
இதனிடையே, அயோத்தியில் ராம சரித மானஸத்தின் ஏழு தொகுதிகளின் அடிப்படையில் ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பண்டைய காலம் தொடங்கி குஷானர் பேரரசு முதல் இன்றைய அயோத்தி வரையிலான சித்தரிப்புகள் இடம் வகிக்கும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
இதனால் நவீனத்துவத்துடன், அயோத்தி மாநகரமானது, ஆன்மிக மற்றும் மத ரீதியான ஒரு புதிய அடையாளத்தையும் பெறுகிறது… இதற்காக, அயோத்தியில் ராமருடன் தொடர்புடைய அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் புதிய மெருகைத் தருவதற்கு யோகியின் அரசு தயாராகி வருகிறது.
அயோத்தியில் பத்து ராம துவாரங்களை கட்டும் திட்டமும் உள்ளது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்காக அயோத்தி தீர்த்த விகாஸ் பரிஷத் எனும் அமைப்பு விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
நாட்டில் மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கான மத்திய அரசின் ஹ்ருதய திட்டம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளுக்கான அம்ருத் திட்டத்துடன் அயோத்தி இணைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் அயோத்தி மாநகரத்தில் நீர் வழங்கல், சுகாதாரம், கழிவுநீர், குப்பை மேலாண்மை, அணுகு சாலைகள், நடைபாதைகள், சைக்கிள் தடங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றை முறையாக நிர்வகிக்க முடியும் என்கின்றனர்.
அயோத்தியின் வரலாற்று முக்கியத்துவத்தை பராமரிக்க வேண்டும் என்றால், ஜப்பானின் கியோட்டோ நகரில் செய்யப்பட்டது போல
வீதிகள், மடங்கள், கோயில்கள் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அயோத்தி - பைசாபாத் மாஸ்டர் திட்டத்தின் கீழ் புதிய அயோத்தியில் குடியேற்றத்தை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாஜா பர்ஹாட்டா கிராமத்திலும், அயோத்தியை ஒட்டியுள்ள ஜெய்சிங் மவு கிராமத்திலும் மூன்றரை கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அயோத்தியின் புதிய வடிவத்தை சிறப்பாகச் செய்வதற்கு உத்தரப்பிரதேச அரசு ஏற்கனவே முழு வீச்சில் செயல்படுகிறது. இந்தநிலையில் மிகப் பிரமாண்டமான அற்புத கலைநயத்துடன் புதிய ராமர் கோயில் அங்கு விரைவில் அமையும்.
அந்த அற்புதத்தை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு ரசித்து ராமபிரானின் அருளையும், ஆஞ்சநேயரின் ஆசிகளையும் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.