ஒவ்வொரு படியிலும் இருக்கும் மகிமை மற்றும் மகத்துவங்கள்  பற்றி அறிந்துகொள்ள...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதற்  படியில் வைக்கும் பெம்மைகள் : தாவர  பெம்மைகள் இடம் பெற வேண்டும் { புல்,செடி,கோடி } 


இதன் காரணங்கள் : பசுமைகள் என்றும் நிறைந்து இருக்க வேண்டும் என்று அர்த்தங்கள் 


இரண்டாம் படியில் வைக்கும் பெம்மைகள் : சங்கால் செய்த பெம்மைகள் அல்லது நத்தை போன்ற பெம்மைகள் வைப்பது நல்லது  


இதன் காரணங்கள் : நத்தையை போல் மெதுவாகவும் , நிதானமாகவும் வாழ்க்கை நடத்த வேண்டும்,மற்றும்  உயர் இடத்தை அடைய வேண்டும் என்று இதன் பொருள் அர்த்தங்கள் 
 
மூன்றாம்  படியில் வைக்கும் பெம்மைகள் : எறும்பு,சிலந்தி, கரையான் புத்து காட்டியது போன்ற பெம்மைகள் இருப்பது நல்லது  


இதன் காரணங்கள் : எறும்பு போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் ,மற்றும் கரையான் புற்று போலும், சிலந்தியின்  வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை இறைவனிடம்  வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும் .


நான்காம்  படியில் வைக்கும் பெம்மைகள் : நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம் பெறுவது முக்கியம். 


இதன் காரணங்கள் : சுறுசுறுப்பாகவும், அதிகம் ஓடும் திறன், தேனீ போல் ஒன்று சேர்ந்து ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்  என்பது விளக்கம். 


ஐந்தாம் படியில் வைக்கும் பெம்மைகள் : மிருகங்கள், பறவை போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.


இதன் காரணங்கள் : ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை கென்று தின்னும் குணத்தை விட்டு விட வேண்டும், பறவைகள் போல் கூடி வாழந்திட வேண்டும் என்று இதன் பொருள்.


ஆறாம் படியில் வைக்கும் பெம்மைகள் : இந்த படியில் மனித பொம்மைகள் மற்றும் இடம் பெற  வேண்டும். 


இதன் காரணங்கள் : முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு ஐந்து அறிவு உள்ளன ஆனால் மனித பெம்மைகள் இடம் பெறுவது ஐந்து அறிவைவிட ஆறாவதாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்பது பொருள். இந்தக் குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறகிறான் என்பது பொருள் யாகும்.


ஏழாம் படியில் வைக்கும் பெம்மைகள் : மகான்கள், முனிவர்கள், ஞானிகள் போன்ற  பொம்மைகள் இடம் பெற  வேண்டும்.


இதன் காரணங்கள் : மனிதன் ஆறாம்  நிலையில் இருந்து தெய்வீக பக்தி நிலைக்கு உயர பக்தி அடைகிறான் என்பதை உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் போன்றவர்களின்  பொம்மை வைப்பது  நல்லது, 


எட்டாம் படியில் வைக்கும் பெம்மைகள் :  நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை இடம் பெற வேண்டும். 


இதன் காரணங்கள் : தவம், யாகம் போன்ற நிலை அடையும்  மகான்கள்  உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர்  அந்தஸ்துக்கு உயர வேண்டும் என்பதை குறிக்கும்.


ஒன்பதாம் படியில் வைக்கும் பெம்மைகள் : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்கள்  தங்களின்  தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் ஒன்று கூடி யிருக்கும் வகையிலான சிலைகளை வைத்தால் நல்லது, மற்றும்  நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.


இதன் காரணங்கள் : இறைவன் ஒன்று கூடியிருப்பது போல் மனிதனும் ஒன்று கூடி வாழவேண்டும் என்பது பொருள் தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை  உணர்த்துகிறது.


கொலுவில் இருக்கும் பெம்மைகளின் அர்த்தங்கள் இதுவே யாகும். மற்றும் நமக்கு பிடித்த வகையில் பெம்மைகளை அலங்கரித்து கொள்ளலாம்