Holy Quran: குரானின் வசனங்கள் சட்டத்தை மீறுகிறதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
சட்டங்களை மீறும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படும் `புனித திருகுர்ஆனின்` (Holy Quran) 26 வசனங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி மனுதாக்கல் செய்திருந்தார்.
புதுடெல்லி: உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. சட்டங்களை மீறும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படும் `புனித திருகுர்ஆனின்' (Holy Quran) 26 வசனங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று சையத் வாசிம் ரிஸ்வி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தேவையில்லாமல் அவசியமற்ற மனுவை தாக்கல் செய்ததற்காகவும், உச்ச நீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரத்தை தவறாக பயன்படுத்தியதற்காகவும் அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
குரானின் சில தவறான வாசகங்களை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடிய சையத் வாசிம் ரிஸ்வி, இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் (Islamist terrorist groups), தங்களுக்கு விசுவாசிகள் அல்லாதவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை "நியாயப்படுத்துவதற்காக" இவற்றை பயன்படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Also Read | கொரோனா பரவல் எதிரொலி, ”Work From Home" முறைக்கு மாறியது உச்ச நீதிமன்றம்
பொருத்தமான வார்த்தைகள், வழிகாட்டுதல்கள் அல்லது உத்தரவுகளை மனுதாரரான தனக்கும், பொது நலனுக்காகவும் வழங்க வேண்டும் என்று ரிஸ்வி தனது மனுவில் கோரியிருந்தார்.
புனித குர்ஆனில் உள்ள வசனங்கள் அல்லது சூராக்களில் உள்ள வாசகங்களை தவறான செயல்களுக்கு பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் இந்த மனுவின் தீர்ப்பு பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்த ரிஸ்வி, குரானின் சில வாசகங்கள் சட்டத்தை மீறுவதோடு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வசனங்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு (sovereignty, unity and integrity) கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டதாகவும், செயல்படாததாகவும் அறிவிக்கப்படலாம் என்று உத்தரபிரதேச மாநில ஷியா வக்ஃப் வாரியத்த்தின் முன்னாள் தலைவரான ரிஸ்வி தனது மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Also Read | Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...
பொதுமக்களின் நன்மைக்காக, தேவைப்பட்டால் தனது மனுவின் பொருள் குறித்த கருத்தைப் பெற பொருத்தமான நிபுணர்கள் அல்லது மத வல்லுநர்கள் குழு நியமிக்கப்படலாம் என்றும் ரிஸ்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது மனு பொருத்தமானது என நீதிமன்றம் கருதினால், இந்திய அரசு (Union of India) இந்த விஷயத்தில் தனது கொள்கையை அறிவிக்கவோ அல்லது வெள்ளை அறிக்கை வெளியிடவோ அல்லது பொருத்தமான சட்டத்தை இயற்றவோ உத்தரவிடலாம் என்றும் ரிஸ்வி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற சட்ட அமர்வு தேவையில்லாமல் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கடிந்து கொண்டு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR