ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகள், அவதார நோக்கம், அருளாற்றல் மற்றும் ஸ்ரீகிருஷ்ண பகவான் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரதம் இருக்கும் முறை:-


கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். 


இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.