நவராத்திரி விழா: கலசம் நிறுத்த உகந்த நேரம் எது?
நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று முதல் துவக்கம். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை (செப்டம்பர் 20) அன்று கலசம் நிறுத்தப்பட்டு, நவராத்திரி விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் மக்கள் மும்முரமாக உள்ளனர்.
நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் பொம்மை கொலு வைத்து அக்கம்பக்கத்தில் இருந்து கன்னிப்பெண்களையும், குழந்தைகளையும் வரவழைத்து அவர்களை மகிழ்விப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
9, 7, 5, 3 என்ற எண்ணிக்கையில் படிக்கட்டுகள் அமைத்து, கீழிருந்து மேலாக ஓர் அறிவு படைத்த உயிரினங்களில் தொடங்கி, ஆறறிவு பெற்ற மனித பொம்மைகளையும், ஏழாம் அறிவு கொண்ட சித்தர்கள், ஞானிகள் பொம்மைகளையும் அதற்கும்மேல் படிக்கட்டுகளில் கடவுள் உருவ பொம்மைகளை வைத்தும் கொலு அமைக்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி விழாவின் கலசம் நிறுத்த உகந்த நேரம்:-
20.09.2017 [புதன் கிழமை] காலை 11.24 மணி - அமாவாசை திதி
கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்: காலை 6.00- 7.30 மணி, 9.15-10.15 மணி.
அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு.
கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.